இந்து அறநிலைய துறைக்கு எதிராக 20 நாட்கள் போராட அனுமதி கேட்ட விவசாயிகள்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: இந்து அறநிலைய துறையை கண்டித்து விவசாயிகள் 2 நாட்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், இரண்டு நாட்கள் அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
விவசாயிகள் சார்பில், தொடர்ந்து 20 நாட்கள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், பல்வேறு காலகட்டத்தில் விவசாயிகளுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களாக கூறி அவற்றை அரசு வகை மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து அறநிலைய துறை, வக்ஃப் வாரியத்திடம் வகைமாற்றம் செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
தானாக பெற்ற விவசாய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க கோரியும், விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை மாற்றி கோவில், மற்றும் வக்ஃப் வாரியங்களுக்கான நிலம் என வகைமாற்றி விவசாயிகளிடம் வாடகை வசூலிக்கும் அறநிலையத்துறை, வக்ஃப் வாரியத்தை கண்டித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், 20 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும் 2 நாட்கள் போராட்டத்திற்கு அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.
2 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாய சங்கம் காவல்துறைக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அதை சென்னை காவல்துறை உரிய பரிசீலினைகளை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications