விபத்து தொடர்பான போலீஸ் விசாரணையில் நீதிபதியின் தலையீடு! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு
சென்னை: விபத்து தொடர்பான காவல்துறையின் விசாரணையில் நீதிபதியின் தலையீடு இருப்பதால், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த சேகர், கார்த்திகேயன், சாந்த மூர்த்தி உள்ளிட்டோர், தங்கள் உறவினரின் இறப்புக்கு சென்று ஊர் திரும்பிய போது கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் மோதி அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்வதற்காக சாலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர், தான் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் கணவர் எனக்கூறி வண்டியை அப்புறப்படுத்தமாறு மிரட்டியுள்ளார்.
பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டியும், சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தியும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர், நீதிபதியின் கணவரிடம் பிரச்சனை செய்ததாக கூறி திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்று காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி காவல்துறை தங்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தது
அதேவேளையில் தங்களுடைய புகார் மனு மீது எந்த விசாரணையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காவல்துறையின் விசாரணையில் திண்டிவனம் மாஜிஸ்ட்ரேட் கமலா அவர்களின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு விசாரணைக்கு மாற்றக் கோரி திண்டிவனத்தை சேர்ந்த சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications