நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி!
சென்னை: நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடப்பதால் தற்போது தேர்தல் நடத்தினால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என நடிகர் சங்கத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்துவதற்கு வேறு எந்தத் தடையும் இல்லை என்றும் நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மேலும் 3 ஆண்டுகளுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்தும், அந்த பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரியும், தேர்தலை உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து நடத்தக் கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-2028 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடப்பதால் தற்போது தேர்தல் நடத்தினால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என நடிகர் சங்கத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடத்துவதற்கு வேறு எந்தத் தடையும் இல்லை, பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என கருதி, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றும் நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போதும், வழக்குகள் காரணமாக 2022ஆம் ஆண்டு தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர் என்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணையை வரும் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications