கீழ் பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கான தடை நீக்க தமிழக அரசு மேல்முறையீடு! இதுவரை என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழ் பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு வரும் ஜூலை 18ஆம் தேதி விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி வாய்க்காலுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் இறுதி வரையிலும் 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கு விவசாயத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Madras High Court

இந்த பணிகளுக்காக ரூ.709 கோடி ஒதுக்கப்பட்டுக் கடந்த 2020 ம் ஆண்டு முதல் வாய்க்கால் கரைகள் சீரமைப்பு, மதகுகள் சீரமைப்பு மற்றும் வாய்க்காலில் காங்கிரீட் தளம் போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகளுக்குத் தடை விதிக்க கோரி அந்த பகுதி பாசன விவசாயிகள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழ் பவானி பாசன வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்திர பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமர்வில் இன்று விசாரணை வந்த போது அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இடைக்காலத் தடை உத்தரவால் கீழ் பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 18க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, இந்த தடையை நீக்கி உத்தரவிடக் கோரி வாதங்கள் வைத்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை 18 ம் தேதி அன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+