தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால் பள்ளிகளும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

madras-high-court-slams-centre-orders-allocation-of-education-funds-for-tamil-nadu

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால் பள்ளிகளும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை எனக் கூறி, கோவை மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால் 2021 -23 கல்வி ஆண்டு வரை மத்திய அரசு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை. 100 சதவீதம் மாநில அரசுதான் வழங்கியது. என்று வாதம் வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+