பி.ஆர்.பாண்டியனின் 13 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஓஎன்ஜிசி சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனின் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைக்க முயற்சித்தது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் கடந்த 2015 ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அந்த போராட்டத்தின் போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன், செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தண்டனையை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழஙி்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார். 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதையடுத்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications