அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்? சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று விசாரணை! பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர் பொன்முடி வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இன்று இந்த வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதி குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1996 முதல் 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அந்தச் சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக இவர் 1.36 கோடி சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002இல் வழக்குப்பதிவு செய்தது.

Madras High Court to hear DMK minister Ponmudi disproportionate assets case today

முதலில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய வேலூர் நீதிமன்றம் பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கிடையே குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

தான் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்று கூறி இந்த வழக்கை அவர் விசாரணைக்கு எடுத்திருந்தார். இதில் குற்ற விசாரணை நடைமுறையைத் திரிக்கும்வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக உத்தரவின் மூலமா மாற்றப்பட்டுள்ளதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். அந்த மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.

மேலும் அவர், "இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டுமென கூறவில்லை. அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்துத் தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி வெங்டேஷ் அறிவித்தார்.

இந்தச் சூழலில் தான் இன்று பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+