'கோயில் ஆக்கிரமிப்பு.. தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை..' ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாகக் கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் எம்.டி.ஹெச். சாலையில் 3 ஆயிரத்து 227 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இவரது தந்தை காலத்தில் அந்த நிலத்தையும், கட்டிடத்தின் உரிமையும் அவரது சகோதரிக்குப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அவரிடம் இருந்து செந்தில்குமார், தனது பெயருக்கு மாற்றியுள்ளார். கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதை எதிர்த்து கே.செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஆக்கிரமிப்புக்குள்ளான சொத்துக்களைக் கையகப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரை உடனடியாக துறை அதிகாரிகள் வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கோயிலுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தகுந்த விசாரணை நடத்தி, வருவாய் இழப்பை மீட்பதற்காகச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாகக் கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதுடன், கோயில்களின் கட்டுப்பாட்டாளராக அரசு இருப்பதால், அந்த குற்றங்கள் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன என வேதனை தெரிவித்துள்ளார்.
சில பேராசைக்காரர்கள், சில தொழில்முறை குற்றவாளிகள், நில அபகரிப்புக்காரர்களால் கோயில் சொத்துகள் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுவதாக எச்சரித்துள்ள நீதிபதி, அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்படும் தவறுகள், அலட்சியம், கடமைகளை மீறுவது ஆகியவை தீவிரமாகப் பார்க்கப்பட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
-
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications