வரலாற்றிலேயே முதல்முறை? ஆளுநர் ரவி தலைமையில் சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா.. பொன்முடி அசத்திட்டாரே
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சர் பொன்முடியும் இதில் பங்கேற்றிருந்தது பெருத்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் நேற்றைய தினம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், "சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை அரங்கில் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.

ஆளுநர் ரவி: விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றுகிறார். இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பொன்முடியின் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தி வருகிறது.. காரணம், சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு வருட காலமாகவே, துணைவேந்தர் யாருமே நியமிக்கப்படவில்லை... இப்போதுள்ள ஒருங்கிணைப்புக் குழுதான், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் சேர்த்து கவனிக்கிறது
துணைவேந்தர்: இப்படிப்பட்ட சூழலில், பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. அதாவது துணைவேந்தர் இல்லாமலேயே இந்த விழா நடந்துள்ளது.. கடந்த 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.. இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.. முன்னதாக, எனினும் இந்த விழாவில், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, பங்கேற்பாரா? என்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பியது.
விருது விழா: நேற்றைய தினம், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில். தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, 4 ஆண்டுகளில் 40 பேருக்கு தமிழக அறிவியலறிஞர் விருதுகளை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னை பல்கலைக்கழக (University of Madras) பட்டமளிப்பு விழா ஓராண்டாக நடத்தப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் கன்வீனர் குழு (convener) அமைக்கப்பட்டு அதனை உயர்கல்வித்துறை செயலாளர் கண்காணித்து வருகிறார்.
அதிரடி அறிவிப்பு: அதனால், பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை செயலாளர், துணைவேந்தர் என்ற வகையில் துணைவேந்தருக்கு பதிலாக பட்டங்களில் கையெழுத்திடுவார். அதற்கான சட்டபூர்வ ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நாளை (இன்று) நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தான் கலந்து கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
எனவே, இன்றைய தினம் ஆளுநர் தலைமையில் நடக்க போகும் விழாவில், பொன்முடி பங்கேற்பதாக கூறியிருப்பது, தமிழக மக்களின் கவனத்தை பெற்றது. பொன்முடி சொன்னதுபோலவே இன்றைய தினம் விழாவில் கலந்து கொண்டார்.
கடந்த வருடம் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் முர்மு கலந்துகொண்டு பட்டங்களை வழங்கியிருந்தார்.. ஆனால், இந்த ஆண்டு, பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
புறக்கணிப்பு: தங்களது 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தனர்.. இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று பட்டமளிப்பு விழா நடக்கிறது.. ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் கவர்னர் பங்கேற்கும் விழாவினை புறக்கணித்து வரும் நிலையில், இன்றைய பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிப்பார்கள் என்றும் கணிப்புகள் வலம்வருகின்றன.
யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர், பொன்முடி இருவருமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள முன்கூட்டியே அமைச்சர் பொன்முடி வருகை புரிந்திருந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றது பெரிதும் கவனம் பெற்றது.. பிறகு இருவருமே ஒரே மேடையில் உட்கார்ந்திருந்தனர்.. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி ஆகிய இருவரையும் ஒரே மேடையில் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications