விடிந்தால் மதுரை மாநாடு.. "லாஸ்ட் மினிட்ல" மாறுதே.. போலீசுக்கு ஓடிய "தலை".. எடப்பாடிக்கு ஒரே டென்ஷன்
சென்னை: இந்த மதுரை மாநாட்டை நடத்தி முடிப்பதற்குள், எடப்பாடி பழனிசாமிக்கு ஏகப்பட்ட சவால்கள் வந்துகொண்டிருக்கின்றன.. இதோ அடுத்த பிரச்சனை கிளம்பிவிட்டது.
நாளை காலை மதுரையில் மாநாடு நடத்துகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. மதுரையே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
3 குறிக்கோள்: முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும் + ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் + ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும் என்ற 3 குறிக்கோள்களை மையப்படுத்தி மாநாட்டை முன்னெடுக்கிறார்.

திமுக செக்: வழக்கம்போல், திமுக முதல் நபராக களத்தில் குதித்தது.. தமிழ்நாடு முழுவதும் நாளைய தினம், ஆர்ப்பாட்டத்தை நடத்த போகிறது திமுக.. மத்திய பாஜகவை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன்மூலம் மாநாட்டை மீடியாவின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பவும் திமுக பிளான் செய்துள்ளது.
இதனால், பாஜகவுக்கு செக் வைத்ததுபோலவும் இருக்கும், எடப்பாடி பழனிசாமியின் மாநாடும் மக்கள் மன்றத்தில் எடுபடாமலும் போய்விடும் என்று நினைக்கிறது.
இதற்கு பிறகு, மதுரை ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.. "மதுரை ஏர்போர்ட்டை சுற்றிலும், பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. மாநாட்டுக்கு விமான நிலைய அதிகாரியிடம் உரியத் தடையின்மை சான்று பெறவில்லை என்பதால், பெருமளவுக்கு போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படும்.. எனவே மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியது. எடப்பாடி தரப்புக்கு இது திகிலை தந்தாலும், மதுரை நீதிமன்றம் மாநாட்டுக்கு அனுமதி அளித்தது.
பவுன்சர்கள்: ஆனால், எடப்பாடியை பொறுத்தவரை, ஏற்கனவே முறையாக போலீசிடமும், சம்பந்தப்பட்ட துறையிடமும் அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறியிருந்த நிலையில், தீர்ப்பும் நிம்மதி உணர்வை தந்தது. என்னதான், போலீஸ் பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமி பெற்றிருந்தாலும்கூட, பவுன்சர்களை மாநாட்டு களத்தில் இறக்கி உள்ளாராம்.
இதற்கு நடுவில், ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான புகழேந்தி அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. மாநாட்டிற்காக அனுமதியின்றி கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு டிஜிபியிடம் புகார் தந்துள்ளார். இதுகுறித்து இன்னும் பதில் வரவில்லை.
பெரும் பரபரப்பு: ஆக, மொத்தம் இந்த மாநாட்டை நடத்தி முடிப்பது என்பதே, எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாடாகிவிடும் என்றே தெரிகிறது. இதன்காரணமாகவே, மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications