Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது அமைதி கெடும் என்பது சாக்குபோக்கு.. திருப்பரங்குன்றம் வழக்கில் மனுதாரர் வைத்த வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த இரு நாட்களாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இன்றும் விசாரணை தொடர்ந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பரபரப்பு வாதங்கள் வைக்கப்பட்டன. அதில் கோர்ட் உத்தரவு பிறப்பித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். தனி நீதிபதி உத்தரவில் எந்த தவறும் இல்லை. கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை. பொது அமைதி கெடும் என்பதெல்லாம் சாக்குப்போக்கு என வாதிடப்பட்டது.

நேற்று நடைபெற்ற விசாரணையில் சுமுகத்தீர்வு ஏற்பட ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என வக்பு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வே வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. காரசார வாதங்கள் இந்த வழக்கில் நடைபெற்ற நிலையில் வழக்கின் விசாரணை இன்றும் நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Thirupparankundram Justice GR Swaminathan High Court

திசை திருப்புவதற்கான முயற்சி

மொத்தம் 26 மனுக்கள் மீது கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வழக்கில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் தனி நீதிபதி உத்தரவை நிறைவேற்றக்கோரி அரசபாண்டி என்பவர் சார்பில் தாக்கல் செய்த மனு மீது, அவரது தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடினார்.

அவர் வைத்த வாதத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண் தீபம் ஏற்றுவதற்கான தூண்தான். ஆனால் இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது என்பது, தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை திசை திருப்புவதற்கான முயற்சியாகும். இது சொத்துரிமை சார்ந்ததல்ல என்று கூறுவதும் ஏற்புடையதல்ல.

நிரந்தர தீர்வு காண்பதுதான் ஒரே வழி

இதற்கு நிரந்தர தீர்வு காண்பதுதான் ஒரே வழியாகும். திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரையில் 1920 மற்றும் 1996-ம் ஆண்டுகளில், நீதிமன்றத்தில் தீர்க்கமான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. அதாவது 1920-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள பகுதி மட்டும் குறிப்பிட்ட தரப்பினருக்கு சொந்தமானது என்றும், மலையின் மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்றும் கூறப்பட்டு உள்ளது" என்று பரபரப்பான வாதங்கள் வைக்கப்பட்டது.

ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலை மீது உள்ள தூண் நில அளவைக்கல் என்றும், சமணர்கள் கல் என்றும் வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல தீபம் ஏற்றுவது தொடர்பாக தர்கா மற்றும் போலீஸ் தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த கருத்துக்களை எல்லாம் தனி நீதிபதி பரிசீலித்தாரா? என கேட்டனர். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த தகவல்கள் தனி நீதிபதியிடம் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

அதேபோல, வக்பு வாரியம் தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் என்று கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தர்காவுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

3வது நாளாக இன்று விசாரணை

இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை 4.45 மணி அளவில் நீதிமன்ற அலுவல் பணி நிறைவடைந்தது. இதனால், இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (டிச 15) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி, இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர் தரப்பு வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது தான். தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை. பொது அமைதி கெடும் என்பது சாக்குபோக்கு” என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+