மலைக்க வைத்த மதுரை மாநகராட்சி ஊழல்.. எஃப்ஐஆர்-ல் நடந்த மோசடி! பகீர் புகார் கிளப்பும் தவெக அருண்ராஜ்
சென்னை: மதுரை மாநகராட்சி வரி வசூலில் 200 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் குற்றத்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் எஃப்ஐஆர் போடப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளரான அருண்ராஜ்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 370 கோடி ரூபாய் மட்டுமே வரி வரவு என கணக்கு காட்டப்பட்ட நிலையில் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், உதவி கமிஷனர் ரங்கராஜன், உதவி வருவாய் ஆய்வாளர் குமரன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

மதுரை மோசடி
இந்த விவகாரம் தமிழக அளவில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் 10 பேர் மீது தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் குற்றத்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறது தமிழக வெற்றி கழகம். இது தொடர்பாக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," மதுரை மாநகராட்சியில் நடந்த சுமார் 200 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரி முறைகேடு
முதற்கட்டமாக அரசு சார் கணினியின் வரி விதிப்பு தொகையில் திருத்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் இது போன்ற நிதி மோசடித் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் மிக முக்கியமாக IPC பிரிவுகள் 120B ( கூட்டுச் சதி), 420 (மோசடி), 471 (அரசு சார் ஆவணங்களில் மோசடி), மற்றும் PC Act (ஊழல் தடுப்புச் சட்டம்) ஆகியவையின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
திமுக ஊழல்
ஆனால், இந்த குற்றத்தின் வீரியத்தை முற்றிலும் குறைக்கும் விதமாக மேற்கூறிய எந்த ஒரு பிரிவையும் FIR இல் சேர்க்கப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மேற்கூறிய IPC 120B, 420, 471 பிரிவுகள் மற்றும் PC Act ஆகியவையின் கீழ் வரும் குற்றங்கள் PMLA Act- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் scheduled offence - ன் அட்டவணையில் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முகாந்திரம் ஆகிவிடும் என்கிற காரணத்தால், பெயருக்கு 465, 466, 468, 477 ஏ மற்றும் ஐ.டி. சட்டங்களின் பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை
அமலாக்கத்துறையிடம் இருந்து காக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்திருப்பதே ஒரு மோசடிதான். ஏற்கனவே அமலாக்கத்துறையின் பிடியில் பல தி.மு.க அமைச்சர்கள் சிக்கி இருக்கும் நிலையில், மேலும் ஒரு அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்த தி.மு.க., வெகு சாமார்த்தியமாக இந்த FIR-ல் குற்றத்திற்கேற்ப பிரிவுகளை சேர்க்காமல் விட்டிருக்கிறது. கீழ்நிலையில் இருக்கும் சில ஊழியர்களை காப்பாற்றவே இந்த மெனக்கெட்டிருப்பதாக தெரியவில்லை; சம்பந்தப்பட்டிருக்கும் மேல் மட்டத்திலிருப்பவர்கள் நோக்கி அமலாக்கத்துறை வந்துவிட கூடாது என்பதற்காகவே FIR இல் இந்த மோசடி நடந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.
தமிழக காவல்துறை
எனவே தமிழக காவல்துறை டி.ஜி.பி மற்றும் காவல்துறை மந்திரியான முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் , குற்றத்திற்கேற்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறோம். விஞ்ஞான முறையில் ஊழல் செய்து அதிலிருந்து விஞ்ஞான முறையில் தப்பிக்கவும் முயற்சிக்கிறது திமுக. கண்ணகி நீதி கேட்ட மதுரையில், இந்த அநீதிக்கும் நீதி கிடைக்குமா..? 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை நினைவில் கொள்க மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களே ..!" என கூறியுள்ளார்.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications