கண்ணாபிள்ளையை தெரியாதா? மதுரையில் தலித்துகளை வாளால் வெட்டிய ஆதிக்க சாதியினர்! சிறுவனைகூட விடலையே
சென்னை: மதுரையில் பட்டியலின கிராமத்தில் சிறுவன் உட்பட 5 பேரை வாளால் வெட்டி சாதிய தீண்டாமை வெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பன்பாட்டு மையம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் மூலமாக சமூகம் சார்ந்த பல்வேறு விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல், பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் அந்த மையம் நடத்தி வருகிறது. சாதிவெறி தீண்டாமை குற்றங்களுக்கு எதிராகவும் இந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது மதுரையில் அரங்கேறி இருக்கும் சாதிய கொடூரத்தை அந்த அமைப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டு உள்ள பதிவில், "மதுரை பெருங்குடியில் பட்டியலின கிராமத்தில் நான்கு நபர் மற்றும் சிறுவனை வாளால் வெட்டி சாதிய தீண்டாமை வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாரி, சசிக்குமார் ஆகிய இரு குற்றவாளிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் பெருங்குடி சங்கையா கோவில் தெரு, பட்டியலின கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மாரி, சசிக்குமார் என இருவர் இரவு திடீரென்று வந்து உள்ளனர். அப்போது சாதி பெயரைக் கொச்சையாக பேசி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த சமயம் அங்குள்ள நாடக மேடையில் அஜித், விஜய்குமார், கணபதிக் குமார் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நிலையில் கண்ணாபிள்ளையை தெரியுமா என்று இவர்களிடம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
#மதுரை_பெருங்குடியில்
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) November 28, 2023
பட்டியலின கிராமத்தில் நான்கு நபர் மற்றும் சிறுவனை வாளால் வெட்டி சாதிய தீண்டாமை வெறியோடு கொலைக் தாக்குதல் நடத்திய அகமுடையார் சமூகத்தை சேர்ந்த மாரி, சசிக்குமார் ஆகிய இரு குற்றவாளிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.#மதுரைமாவட்டம் #திருப்பரங்குன்றம்வட்டம்… pic.twitter.com/bMQHdBFPQa
எங்களுக்கு தெரியாது என்றவுடனே மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து இரண்டு பேரை முதலில் சாரமாறியாக வெட்டி உள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றிருந்த பெரியசாமி அவரின் பேரன் சம்பவத்தை நேரில் பார்த்து ஏன் என்று கேட்டவுடன் பெரியசாமியை அடித்து சிறுவனின் கை, கால் மீது கொடூரமாக வெட்டியுள்ளனர்.வெட்டுப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாதி வெறியர்களின் அராஜக அட்டுழியம் தான் யாருக்கும் சம்பந்தமில்லாத பட்டியலின கிராமத்தில் சாதிய தீண்டாமை வெறியோடு தாக்குதல் நடத்தி உள்ளார்கள். குற்றவாளிகளை SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும், மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சாதிய தீண்டாமையால் கொடூரமாக பாதிக்கப்பட்ட சிறுவன் சர்வீன் மற்றும் நான்கு நபருக்கு நீதி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications