டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து தமிழர்கள் படைப்புகள் நீக்கம்..சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
சென்னை: டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருவதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான மஹாஸ்வேதா தேவியின் 'திரௌபதி', பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழர்கள் படைப்பு நீக்கம்
பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனை நடத்திய பின்னர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் பாடப்பிரிவில் இருந்து தமிழர்கள் படைப்பு நீக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக இந்த படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

பலரும் கண்டனம்
நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்களது படப்புகள் மூலம் பொது சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி வரும் படைப்பாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு தமிழகத்தை சேர்ந்த படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சு.வெங்கடேசன் எம்.பி
மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '' தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

எழுத்தாளர் சுகிர்தாராணி கூறுவது என்ன?
தனது படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் சுகிர்தாராணி கூறுகையில், ' டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து எனது படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுகிறது. இதில் சாதிய பின்புலம் தான் இருக்கக்கூடும்.ஒரு எழுத்தாளராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications