பாஜகவை பொசுக்னு இப்படி கேட்டுட்டாரே மதுரை வெங்கடேசன்.. "மூஞ்சில முழிக்க கூடாதுன்னு.. பாசிஸ்டுகள்"
சென்னை: இன்றைய தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் மறுபடியும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவு ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இன்று தேசம் முழுவதும் காந்தி ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது... திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்திலும், டெல்லியிலும் திடீர் பரபரப்பு சம்பவம் நடந்துவிட்டது.

சென்னை காந்தி மண்டபத்தில் குப்பைகள் கிடப்பதாகவும், காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் ரவி பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
புதுக்கோட்டை: இந்நிலையில், ஆளுநரின் குற்றச்சாட்டு தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, காந்தி மண்டபம், கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களில் இருந்த தலைவரின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.... மத்திய பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கொந்தளித்து பேசியிருந்தது..
காந்தி: "நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்தச் சிலைகள் எல்லாவற்றையும் பாஜக அரசு அகற்றியுள்ளது. அவற்றை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து காட்சிப் பொருளாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த எதேச்சதிகார நடவடிக்கையை கண்டிக்கிறோம். அவற்றை பழைய இடங்களிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் மறுபடியும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசத்தின் தந்தை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிறபொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்.,.. நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை... வாழ்க நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை... வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications