மதுரை முத்து ஓபனா சொல்லிட்டாரு.. "பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்".. கொதிக்கும் "இந்துத்துவா"
சென்னை: மதுரை முத்துவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது பெரும்பாலானோரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்துக்கென்றே ஒரு உடல்மொழி உண்டு. மதுரை மாவட்டத்துக்கென்ற ஒரு வட்டார மொழி உண்டு.. இந்த இரண்டையும் சேர்த்து, இழைத்து குழைத்து ரசிகர்களிடம் தருபவர் மதுரை முத்து.
ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம், ஒற்றை வரி ஜோக்குகளை சொல்லி, தமிழக மக்களிடம் அறிமுகமானவர்.. இவரது ஒன்லைன் கவுண்டர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

விஜய் டிவி: சன் டிவி அசத்தப்போவது யாரு, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, வெற்றிகளை தொடர்ந்து தொடர்ந்து கலகல பேச்சுக்களால் பட்டிமன்றங்களை திணற செய்பவர்.. அதிரடி பேச்சுக்களால் மேடை பேச்சுக்களை கவனிக்க செய்பவர்.. ஸ்டாண்ட் அப் காமெடி என்றாலே அதில் முன்வரிசையில் வந்து நின்றுவிடுபவர் முத்து. இப்போது, சினிமாவிலும் கால் பதிக்க துவங்கி உள்ளதால், இவர் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு கூடி வருகிறது.
இந்நிலையில், திடீரென மதுரை முத்துவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நிகழ்ச்சி ஒன்றில் மதுரை முத்து, இளைஞர்கள் மத்தியில் பேசும் வீடியோ போல தெரிகிறது. இது ஏதோ கல்லூரி விழாவாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
ஆன்மீகம்: இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசும்போது, "ஆன்மீகத்தில் அழகாக சாமி கும்பிடறவங்க இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஸ்பெஷல் அர்ச்சனை வந்துவிட்டது. ஒருத்தர் ரூ.50 கொடுத்தால், உடனே அவருக்கு குங்குமம், விபூதியை கொஞ்சம் அதிகமாக தருவாங்க. ஒருத்தர் ரூ.100 கொடுத்தால், உடனே அவரை கூப்பிட்டு, "இப்படி நேரடியாக நின்னு சாமியை பாருங்க" என்கிறார்கள்.
ஒருத்தர் 200 ரூபாய் கொடுத்தால், கேட்டை திறந்துவிட்டு, "வாங்க உள்ளே வந்து தரிசனம் பண்ணுங்க" என்று கூப்பிடுவார்கள். ஒருத்தர் 300 ரூபாய் கொடுத்தால், "வாங்க, உள்ளே வாங்க, பெருமாள் பக்கத்துல நின்று, பெருமாள்கிட்ட செல்பி எடுத்துக்குங்க" என்கிறார்கள்.

பெருமாள்: ஒருத்தர் 500 ரூபாய் கொடுத்தால், "போனை பெருமாள்கிட்டயே குடுங்க, அவர் செல்பி எடுப்பார் என்பார்கள். ஒருத்தர் 1000 ரூபாய் கொடுத்தார், உடனே அர்ச்சகருக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் சார் இங்கேயெல்லாம் வர்றீங்க? ஒரு போன் பண்ணியிருந்தீங்கன்னா, பெருமாளை தூக்கிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்திருப்பேன் இல்ல? என்றார் மதுரை முத்து.
மதுரை முத்து பேசப்பேச, அரங்கமே அதிர்ந்தது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. வீடியோவை பார்ப்பவர்கள், மதுரை முத்துவின் பேச்சை ரசித்து வருகிறார்கள். ஆனால், அதேசமயம், மதுரை முத்துவின் பேச்சு, சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. முக்கியமாக இந்துத்துவா தரப்பினர், மதுரை முத்து பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்..
சர்ச்சை : பெரும்பாலும் இதுபோன்ற பிரபலங்களின் காமெடி பேச்சுக்களில் தாக்குதல்கள் இருந்தாலும் அதை பலரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.. கேஷூவலாகவே சிரித்துவிட்டு கடந்து விடுவது இயல்பு. ஆனால், மதுரை முத்துவின் பேச்சு, பக்தர்கள் மனம் புண்படும்படியாக இருப்பதாக அதிருப்திகளும் கிளம்பி உள்ளன. அந்தவகையில், இத்தனை வருட காலம் இல்லாமல், முதல்முறையாக சர்ச்சையில் சிக்கி உள்ளார் மதுரை முத்து..!!
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications