Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் 10% கமிஷன்.. மதுரைக்கே கிளம்பி போயி சொன்ன எடப்பாடி பழனிசாமி.. பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்களை ஒருபோதும் பாஜ விழுங்க முடியாது என மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலைத் தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதற்குமேல் மதுரையில் பரபரப்பை தந்து வருகிறது.

"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. அந்தவகையில், நேற்றைய தினம் மதுரை ஒத்தக்கடையில் பிரச்சாரம் செய்திருந்தார்..

TN Registration Minister Madurai edappadi Palanisamy

இந்த பிரசாரத்திற்காக ஒத்தக்கடை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மீனாட்சி மிஷன் அருகாமை ரிங்ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டதால், பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெரும் சிரமத்திற்கு ஆளாகியதாக கூறப்படுகிறது..

ஓபிஎஸ் போட்டோ

மேலும் கோ.புதூர் பகுதியில் சாலையின் இருபுறமும் 75க்கும் மேற்பட்ட கடைகளை மறைத்து ஐகோர்ட் கிளை உத்தரவையும் மீறி, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாம்.. புதூர் பஸ் ஸ்டாண்டின் சிமெண்ட் தரைத்தளத்தை உடைத்து மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது. மாநகராட்சியினருடன், போலீசாரும் இணைந்து கட்டவுட்கள் பேனர்களை அகற்றியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, பிரச்சாரத்திற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்களில் சிலர் ஓபிஎஸ் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுபோன்ற பரபரப்புகளுக்கு நடுவில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "அதிமுக, பாஜ கூட்டணியால், அதிமுகவை பாஜ விழுங்கி விடும். அடிமைப்பட்டு விட்டோம் என்றெல்லாம் சொல்கின்றனர். எங்களை யாராலும், ஒருபோதும் விழுங்க முடியாது" என்று கூறியிருந்தது அதைவிட பரபரப்பை கிளறிவிட்டுள்ளது.

ஒத்தக்கடை பிரச்சாரம்

ஒத்தக்கடை பிரச்சாரத்தில் எடப்பாடி பேசும்போது, "அந்தந்த சூழ்நிலைக்காக தற்போது கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. அதிமுக கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாது.

மக்கள்தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் எத்தனை கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெற முடியாது.. ஸ்டாலின் மீதும், திமுக அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுக இப்போது வீடுவீடாக சென்று கெஞ்சி கூத்தாடி கட்சி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. தொண்டர்கள் இருந்திருந்தால் ஏன் வீடு வீடாக போய் கெஞ்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்?

திமுகவில் உறுப்பினராக சேராவிட்டால் உதவி தொகையை நிறுத்துவதாக மிரட்டுகின்றனர். திமுகவின் மிரட்டல்களுக்கு மக்கள் பயப்படக்கூடாது. மக்களுக்கு அதிமுக பக்கபலமாக இருக்கும்.

மகளிர் உரிமைத் தொகையை திமுகவினர் அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்தா தருகிறார்கள்? கடன் வாங்கி தருகிறார்கள். வருமானத்தை பெருக்கி தரவில்லை. இந்த கடனை மக்கள் தான் கட்ட வேண்டும். வருவாயை பெருக்காமல், கடன் வாங்கி உரிமை தொகை வழங்குவது எந்த வகையில் நியாயம் ? மக்களுக்கு சுமையாகத்தான் இருக்கும்.

கமிஷன் பெறப்படுகிறதா

அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து மகளிர் உரிமைத் தொகை தந்தனர். இப்போது விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு உதவி தொகை தருவதாக சொல்கிறார்கள்.. பெண்களின் கஷ்டத்தை பார்த்து அறிவிக்காமல், வரும் தேர்தலில் வாக்குகளை பெறவே இந்த நாடகம்... கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடித்து அளித்த வாக்குறுதிகளை மறந்து ஆட்சி செய்கின்றனர்.

இந்த தொகுதியின் அமைச்சர் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். பத்திரப்பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி 10 ரூபாய் அமைச்சர் என்றால், இவர் 10 பிரசென்ட் அமைச்சர்... எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். கமிஷன் தராவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது. கஷ்டத்தில் சொத்துகளை விற்பவர்களை கமிஷன் என்ற பெயரில் மேலும் கஷ்டப்படுத்துகிறார்கள்..

பத்திரப்பதிவு

தமிழகம் முழுவதும் 582 பத்திரப் பதிவு அலுவலங்கள் இருந்தும், இந்த அலுவலகங்களில் ஒரு சார் பதிவாளரை ஒரு வருடத்துக்கு மேல் பணிபுரியவிடுவதில்லை. டிரான்ஸ்பர் செய்து அந்த வகையில் பெரிய தொகை வசூலிக்கிறார்கள்.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல் தோண்டி எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சி இருக்கும் வரை யாரும் வீடு கட்ட முடியாத அளவுக்கு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் திறனற்றவர்களாக ஸ்டாலினும், அமைச்சர்களும் உள்ளனர்.

4 ஆண்டு 2 மாதம் ஆட்சியில் நான் இருந்தபோது, இப்படி செய்ய மனமில்லாமல் இருந்தோம். இந்த திமுக அரசு மிக மிக மோசமான, மிக மிக கேவலமான அரசாக உள்ளது. எல்லா துறையிலும் லஞ்சம் தாண்டவமாடுகிறது. இதை மக்கள் துணையுடன் வெல்வோம். இதற்கெல்லாம் அமைச்சர்கள் அடுத்தாண்டு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

திராணி, தெம்பு

அதிமுக எழுச்சி பயணத்துக்கு அமைச்சர் தொந்தரவு தந்து வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், திராணி, தெம்பு வேண்டும். இந்த அரசு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் எதற்கும் அனுமதி தருவதில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டுமா? நான் எதற்கு அச்சப்பட மாட்டேன். பத்து முறை தேர்தலில் நின்றுள்ளேன். என்னிடம் உங்கள் பாச்சா பலிக்காது.

ஸ்டாலின் வெளிநாடு சென்று, 3 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சாலைகள் அதிமுக ஆட்சியின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்கெனவே தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

ஏதோ தில்லு முல்லு

அந்த தொழிற்சாலைகளை விரிவுபடுத்த ஜெர்மனியில் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்கு ஏன் ஜெர்மனிக்கு போக வேண்டும்? இங்கு வைத்தே ஒப்பந்தம் போட்டிருக்கலாமே? 1000 கோடி ரூபாய்க்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் புதிதாக போட்டுள்ளனர்.. எனவே, ஸ்டாலின் தன்னுடைய சொந்த வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதில் ஏதோ தில்லு முல்லு உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவை பாஜகவின் அடிமை என்கிறார்கள். நாங்கள் எப்போதும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பாஜகவும் கருதுகிறது. இந்த ஒத்தக் கருத்து அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம்.. இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?

அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்

அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அதிமுகவை எந்தக் கட்சியாலும் விழுங்க முடியாது. ஸ்டாலின் தான் கூட்டணி கட்சியை விழுங்கிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும். உஷாராக இருந்தால் தப்புவீர்கள். இல்லாவிட்டால் உங்களை ஸ்டாலின் விழுங்கிவிடுவார். 1999-ல் நீங்க கூட்டணி வைத்தால் பாஜக நல்லக் கட்சி. அதிமுக கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு அடிமை எனக் கூறுவதா? இது எந்த வகையில் நியாயம்?

கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. தேர்தல் நேரத்திலும் எல்லா கட்சிகளும் கூட்டணி அமைப்பது தான். அந்த அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி வேறு. கொள்கை வேறு. கொள்கை நிலையானது. அதை யாராலும் மாற்ற முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+