சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வூட்டும் போலீஸ்காரர் பாலா.. கைகளை தட்டி உற்சாகமூட்டும் மதுரைவாசிகள்..!

மதுரை பாடகர் பாலா கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரையை சேர்ந்த போலீஸ்காரர் பாலா, பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மதுரை மக்களை ஈர்த்து வருகிறது.

தொற்று அதிகமாக பாதித்த மாவட்டங்களில் மதுரையும் ஒன்று.. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது..!

இதையடுத்து, தொற்றுவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், 10 மணிக்கு பிறகு, பொதுமக்களில் சிலர் தேவையில்லாமல் பைக், கார்களில் சுற்றி வருகிறார்கள்..

திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!

அறிவுரை

அறிவுரை

இவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், போதுமான அறிவுரைகளை சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.. அந்த வகையில், பாலா என்ற போலீஸ்காரர் மட்டும், இதுபோன்று வெளியே வரும் மக்களிடம், விழிப்புணர்வு பாட்டு பாடுகிறார், அப்போது உடனிருக்கும் போலீசார்கள், கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்..! தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் போலீஸ்காரர் பாலா..!

பாட்டு

பாட்டு

பைக்கில் யார் அந்த பக்கமாக வந்தாலும், அவர்களை தடுத்து நிறுத்தி, "ஆவினில் பால் வாங்க கியூ வரிசை நிக்குது... ரே‌ஷன் கடையில் கியூ வரிசை காத்து கிடக்குது... பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க க்யூ வரிசை பார்க்க முடியுது... ஆனா முதன் முறையா பிணம் எரிக்க கியூ வரிசை நிக்குதம்மா... சுத்தமாக இருந்து கொரோனாவை விரட்டுங்க" என்று பாடுகிறார்.. இதை கேட்டதும் வாகன ஓட்டிகள் கைதட்டி அவரை பாராட்டுகின்றனர்.

நெறிமுறைகள்

நெறிமுறைகள்

கொரோனோ காலத்தில வீட்டை விட்டு வெளியே சுற்ற கூடாது, அரசு சொல்லும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டுப்புற பாடலாக பாடி வருகிறார்.. போலீஸ்காரர் பாலா, பிரபல சினிமா பின்னணி பாடகரும் ஆவார்... நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வரும் "மக்க கலங்குதப்பா, மடிப்புடிச்சி இழுக்குதப்பா, நாடு கலங்குதப்பா, நாட்டு மக்க தவிக்கிதப்பா என்னப் பெத்த மக ராசா" என்ற பாடலை எழுதி பாடியவர்..

வேலை

வேலை

தெற்குவாசல் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் படித்து முடித்ததும் 2010-ம் ஆண்டு போலீஸ் துறையில் வேலையில் சேர்ந்தார்.. கொரோனா விழிப்புணர்வு அறிவுரை கூறும்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதவல்லி, கேட்டுக்கொண்டார்... அதன்படியே தற்போது இந்த பகுதியில் பாடி வருகிறேன்.. போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை விடிய விடிய பாடவும் தயாராக உள்ளேன் என்கிறார் பாலா.

English summary
Madurai policeman Bala singing a Corona awareness song
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X