தமிழ்நாட்டுக்கே நிம்மதி.. ஒரே அறிவிப்பில் ஆடிப்போன மதுரை அரசு மருத்துவமனை.. திடீர்னு அதிரடிய பாருங்க
சென்னை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்ற புகார்கள் நீண்ட நாட்களாகவே வலுத்து வந்தது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்று சிகிச்சைக்கு வரும் நோயாளிகளே குற்றம்சாட்டி வந்தனர்..
புது அறிவிப்பு: இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்கள் பணிக்கு வருவதை முறைப்படுத்த பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. சமீபத்தில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர், வருகை பதிவேட்டில் 10 நாட்களுக்கான வருகை பதிவை ஒரே நேரத்தில் இடும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
மருத்துவர்கள்: பொதுவாக, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்தி தங்களது வருகையைக் கட்டாயமாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.. ஆனால், பெரும்பாலான மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த நடைமுறைகளை சரியாக கண்காணிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மருத்துவர்கள் வருகை பதிவை கணக்கீடு செய்து பார்க்கப்பட்டுள்ளது.. அப்போது, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்கள் காலை நேரங்களில் பணிக்கு சரியான நேரங்களில் வருவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மருத்துவமனை: இதையடுத்து, ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், மருத்துவப்பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்களுக்கு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் உள்ளதாவது:
"மருத்துவர்கள் பணிநேரத்தில் காலையில், ஒரு நிமிடத்திற்கு தாமதமாக வந்தால் கூட அதைக் கண்டறியப்பட்டு அது "ஆப்சென்ட்" ஆக கணக்கிடப்படும் என்றும், ஈட்டிய விடுப்பில் இருந்து அந்த நாட்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கழித்துக் கொள்ளப்படும். மருத்துவர்கள் அலுவலக வேலையாக வெளியே சென்றாலும் அல்லது வேறு அலுவலக பணியாகச் சென்றாலும் அது குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்,
கலக்கம் : அப்படி பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அது விடுமுறையாகவோ அல்லது வராமல் போனதாகவோ கருதப்பட்டு அவர்களது ஈட்டிய விடுப்பில் கழித்துக் கொள்ளப்படும் என்றும், அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அந்த சுற்றறிக்கையில் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது..
தேசிய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு பின்பற்றப்படுகிறது என்றாலும், இந்த கண்டிப்பு உத்தரவானது, பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications