நாங்களா தற்குறி? விஜய் ஆதரவாளர் VS கோட்டீஸ்வரன்! "ஒன்இந்தியாதமிழ்" மதுரை Zen Z Talk நிகழ்வில் அனல்
மதுரை: ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடும் நீங்கள் தற்குறியா, விஜய்யை ஆதரிக்கும் நாங்கள் தற்குறியா என்று விஜய் ஆதரவாளர் கேட்க அதற்கு, மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் பதிலளிக்க, என அனலோடு கலகலத்துப் போனது மதுரை.
ஆம்.. உங்கள் "ஒன்இந்தியாதமிழ்" சார்பில், மதுரையில் "Zen Z Talk" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் பங்கேற்றார். இளம் தலைமுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள், விவசாயம் செய்யும் இளைஞர்கள் என பல தரப்பட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

"ஒன்இந்தியாதமிழ்" ஆசிரியர் வீரக்குமாரன் வரவேற்புரை மற்றும் துவக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில், கோட்டீஸ்வரனை அழைத்து "ஒன்இந்தியா" ஸ்டூடியோவில் வைத்து நிகழ்த்திய இளைஞர்களுடனான சந்திப்பு மிகப்பெரிய சக்சஸ் ஆனது. ஒரு வார காலம் சோஷியல் மீடியா முழுக்க அந்த வீடியோக்கள் சுற்றி வந்தன. இதையடுத்து, மதுரை இளைஞர்களுக்கு பேச வாய்ப்பு தரும் வகையில், மதுரையில் நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதுபோல பல்வேறு பகுதிகளிலும் "ஒன்இந்தியா" குழு பயணிக்க உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் வீரக்குமாரன் பேசுகையில், "சில அரசியல்வாதிகள் செல்வாக்கை காண்பிக்க கூட்டம் கூட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது, நெரிசல் சம்பவங்களுக்கு காரணம்" என்று நடிகர் அஜித் கூறியிருந்தார். எல்லோரும் பொறுப்பாளி என்கிற நோக்கத்தில்தான், மீடியாக்களும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார் அஜித். ஆனால், அந்த கருத்தில் முழு அளவில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில், விஜய் நிகழ்ச்சியை கவர் செய்வதோடு "ஒன்இந்தியாதமிழ்" போன்ற ஊடகங்கள் கடமையை முடிப்பதில்லை.
அந்த கூட்டத்தில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன என்பதை ஸ்பாட்டில் இருந்து நிருபர்கள் மூலம் வரும் தகவல்களோடு சுட்டிக் காட்டி செய்தி கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. டிஜிட்டல் ஊடகத்தில் நம்பர் 1 இடத்திலுள்ள "ஒன்இந்தியாதமிழ்" போன்ற ஊடகம் எத்தனையோ தவறுகளை சுட்டிக் காட்டியும் தவெக அதை திருத்தவில்லை. அப்படி திருத்தியிருந்தால் கரூரில் நடைபெற்ற மோசமான சம்பவம் நடைபெறாமலே போயிருக்க கூடும் என்று தெரிவித்தார். மேலும் "ஒன்இந்தியாதமிழ்" எப்படியெல்லாம், விஜய்யை முன்னெச்சரிக்கையாக இருக்க கூறி செய்தி வெளியிட்டது என்ற ஸ்க்ரீன் ஷாட் காட்சிகளையும் இளைஞர்கள் மத்தியில் காண்பித்தார்.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பா ரிலானுங் கெடும்" என்று திருக்குறள் கூறுவதை மேற்கோளிட்ட வீரக்குமாரன், ஊடகங்கள் இடித்துரைத்தும் தவெகதான் கேட்கவில்லை என்பதால், அஜித்தின் கருத்தில் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இடித்துரைத்த ஊடகங்களை தவெக சரியாக கையாளவில்லை என்பதற்கு உதாரணமாக, என்டிடிவி நிருபர் முன்பாக, தவெகவினர் டான்ஸ் ஆடிய காட்சிகளையும் காண்பித்தார்.
இதையடுத்து பேசிய கோட்டீஸ்வரனிடம், இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்தார். தற்குறிகள் என விஜய் ரசிகர்களை கேட்பது குறித்தும் அதில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் கோட்டீஸ்வரன் சுவாரசியமாக பதிலளித்தார். சுமார் 3 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பல பாகங்களாக "ஒன்இந்தியாதமிழ்" யூட்யூப் தளத்தில் ஒளிபரப்பாகிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications