Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுட்டே இருந்த மனைவி.. மதுரை நபருக்கு தேவைதான்.. திருநெல்வேலி நீதிபதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.. தமிழக அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவு போன்றவற்றின் அதிரடி நடவடிக்கைகளினால் ஆன்லைன் விளையாட்டு தற்கொலைகளும், கொடுமைகளும், துயரங்களும் ஓரளவு குறைந்துள்ளன.. இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. என்ன நடந்தது திருநெல்வேலியில்?

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால், எத்தனையோ பலர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தது..

Madurai alimony Thirunelveli

எனவேதான், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2022ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்ததை உறுதி செய்தது.

ஆன்லைன் விளையாட்டு

திறமைக்கான ஆன்லைன் விளையாட்டான ரம்மி, போக்கர் (ஒரு வகையான சீட்டாட்டம்) விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததுடன், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது...

ஹைகோர்ட் உத்தரவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு அவசியம்

அதுமட்டுமல்ல, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்துக்கு மேல் விளையாடும்போது, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அலர்ட் மெசேஜ்களை அனுப்பும் வசதியை ஏற்படுத்தவும், விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் வைத்து விளையாட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் என்பதால், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்றெல்லாம் விதிகளில் கூறப்பட்டுள்ளது.

கோர்ட் வரை போன தம்பதி

இப்படிப்பட்ட சூழலில், ஆன்லைன் ரம்மி விளையாடி, தன்னுடைய மனைவி , குழந்தையையே ஒருவர் தவிக்க விட்டுள்ளார்.. இதுகுறித்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

மதுரை கப்பலுாரை சேர்ந்தவர் முரளி.. 33 வயதாகிறது.. கார் கம்பெனி ஒன்றில் மேனேஜராக வேலை பார்க்கிறார்.. இவரது மனைவி பெயர் நாகலட்சுமி.. திருநெல்வேலியை சேர்ந்த நாகலட்சுமிக்கும், முரளிக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்தது. 3 வயதில் சைலேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

ரம்மி விளையாட்டு மோகம்

ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்தே முரளி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிவிட்டாராம்.. இந்த ரம்மி விளையாட்டு மோகத்தில், குடும்பப் பொறுப்புகளையும் கவனிக்கவில்லை. ஒருகட்டத்தில் மனைவியின் நகைகளை அடகு வைத்து விளையாடி, பணத்தையும் இழந்துள்ளார்.. இந்த கோபத்தில் மனைவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது..

இதனால் மனம் வெறுத்துப்போன நாகலட்சுமி, நெல்லையில் குழந்தையுடன் தனியாக வாழ்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், தனக்கும், குழந்தைக்கும் பராமரிப்புக்காக, மாதம் 20000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நாகலட்சுமி வழக்கு தாக்கல் செய்தார்.

அதிரடி காட்டிய நீதிபதி

இந்த வழக்கு விசாரணையின்போது பதிலளித்த முரளி, "என் பெற்றோரை நானே கவனித்து வருகிறேன். அதனால் அதிக தொகையை வழங்க இயலாது" என்றார்..

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அமிர்தவேலு, ''முரளி தன்னுடைய மனைவிக்கு மாதம் 7,500, மகனுக்கு 3,000 என மொத்தம் 10,500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்..

ரம்மி விளையாடி குடும்பத்தை கவனிக்காத நபருக்கு, நீதிபதி தந்துள்ள இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+