Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

500 புதிய மின்கம்பங்கள்.. 89 புது மின்மாற்றிகள்.. மாடர்ன் ஆன மதுராந்தகம் மின்துறை..

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்: சென்னைக்கு மிக அருகில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி மதுராந்தகம். இதன் அருகேதான் பறவைகளின் சரணாலயமான வேடந்தாங்கல் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய மதுராந்தகம் ஏரியும் இங்கேதான் இருக்கிறது.

இனிவரும் காலங்களில் சென்னை விரிவாக்கத்தின்போது அதிக பலனைப் பெறக்கூடிய சட்டமன்றத் தொகுதியாக மதுராந்தகம் உள்ளது. ஆகவே, இந்தப் பகுதியை மேம்படுத்துவதற்காக பலகட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துவருகிறார்.

குறிப்பாக மாண்டஸ் புயலின்போது அதிகம் பாதிப்படைந்தது மதுராந்தகம். முற்றிலுமாக மின்கம்பங்கள் நூற்றுக்கணக்கில் முறிந்துவிழுந்தன. அத்தனை பணிகளையும் 2 நாள்களில் சரிசெய்து மின்சாரத்தை வழங்கினார் ஸ்டாலின்.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

அத்துடன் இல்லாமல், இந்தத் தொகுதி கடந்த 2 ஆண்டு காலத்தில் மின்சாரத் துறை சார்ந்து பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. குறைந்த மின் அழுத்தம், அதிக மின் பளு என எல்லா தடைகளையும் உடைத்தெறிந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி அதிகாரிகள் பலரிடமும் நாம் பேசினோம். இந்த திமுக ஆட்சியில் மின் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கேட்டறிந்தோம்.

நம்மிடம் பேசிய உதவிப் பொறியாளர் சே. யோகராஜ், "இந்த நகரம் மதுராந்தகம் மின்சாரத்துறையில் சுமார் 750 மின்மாற்றிகள் என் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் 7 மின்மாற்றிகளை புதியதாக மாற்றி அமைத்துள்ளோம்.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

மேலும் 14 மின்மாற்றிகளை மாற்றுவதற்கான மதிப்பீடு தயார்செய்து அனுமதி பெற்றுள்ளோம். கூடிய விரைவில் புதிய மின்மாற்றிகளை அமைக்க உள்ளோம்.

அதைப்போல் மாம்பாக்கத்தில் 2 டிரான்ஸ்ஃபார்மர்கள் அதிக மின் அழுத்தத்தால் செயல் இழந்து, எரிந்துபோய் விட்டது. 2 மணி நேரத்தில் புதியதாக மாற்றித் தந்துவிட்டோம்.

50 கேவி திறன் கொண்ட தனி கம்பங்களில் அமைக்கக்கூடிய வசதி கொண்ட 50 மின்மாற்றிகளை, தெருவுக்கு ஒன்று என்ற கணக்கில் அமைத்துள்ளோம். இதனால் மின்னழுத்தப் பிரச்சனை தடுக்கப்பட்டுள்ளது.

சாலைகள் அனைத்தும் குறுகலானவை என்பதால், பெரிய மின்மாற்றிகளை அமைப்பதில் சிக்கல் இருந்தது. அதை ஆய்வுசெய்து சிங்கிள் போஸ்ட் மின்மாற்றிகளை வைக்க முடிவுசெய்தோம். இதை வைத்தபிறகு அதிக பளு இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்தபின் ஒட்டுமொத்த மின்வெட்டு ஏற்படுவதில்லை. ஒரு தெருவுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை ஏற்படும். அதைச் சீர்செய்யும் போது மற்ற தெருக்களில் பாதிப்பு ஏற்படாது.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

இப்படி கடந்த 2 ஆண்டுகளில் பல வகைகளில் மின்நிலையத்தைப் புதுமையாக்கி இருக்கிறோம்." என்கிறார்

குறிப்பாக, வன்னியர் தெருவில் மட்டும் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்துவந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் என்பதால், அடிக்கடி குறைந்த அழுந்த மின்சாரம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் இப்போது தெருவின் ஒரு பக்கம் உள்ள வீடுகளுக்கு ஒரு மின்மாற்றி, அதேபோல் சாலையில் எதிர்வரிசையில் உள்ள வீடுகளுக்கு ஒரு மின்மாற்றி எனத் தனித்தனியாகப் போட்டுள்ளனர்.

அதற்குப் பின்னால் எந்த மின் தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் நடந்துவருவதாக அப்பகுதி வாசிகள் மகிழ்ச்சியாக நம்மிடம் தெரிவிக்கின்றனர்.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

இந்த அளவுக்கு துரிதமாகச் செயல்பட்டு, தங்கள் பகுதி மின் பிரச்சினைகளைச் சீரமைத்துத் தந்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த ஊர்மக்கள் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர்.

ஊரக மதுராந்தகம் பிரிவில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வரும் கணேசன், "எங்கள் பகுதியில் சில தெருக்களில் மின்தடை பிரச்னைகள் இருந்தன. ஆகவே, அந்தப் பகுதிகளுக்கு இரண்டு 25 கேவி டிரான்ஸ்ஃபார்மர்களை அமைத்துத் தந்துள்ளோம்.

அதேபோல் ஒரு தெருவுக்கு 63 கேவி டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும் போட்டுக் கொடுத்துள்ளோம். இவற்றை அமைத்த பிறகு குறைந்த மின் அழுத்த மின் தடை பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

மாரி புத்தூர் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்களின் வயல்களில் நிறைய மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதாகப் புகார்கள் வந்தன. அந்தக் கம்பங்கள் அனைத்தையும் மாற்றித் தந்துள்ளோம். பல இடங்களில் புதிய கம்பங்களை அமைத்து தந்துள்ளோம்" என்கிறார்

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

இதே மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஆற்காடு, உழவெட்டி ஆகிய பகுதிகளில் மட்டும் 180 மின் கம்பங்கள் புதியதாக மாற்றியுள்ளனர்.

மண்டல அலுவலர் செந்தாமரை, "எங்களது மதுராந்தகம் பகுதியில் மட்டும் 5 துணைமின் நிலையங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 1702 மின்மாற்றிகள் உள்ளன. அதில் பழுதானவற்றைக் கண்டறிந்து இதுவரை 89 மின்மாற்றிகளை புதியதாக மாற்றி அமைத்திருக்கிறோம்.

அதைப்போன்று பழுதான 189 மின்கம்பங்களை இந்த இரண்டு ஆண்டுகளில் மாற்றித் தந்துள்ளோம். இப்போது விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகளை வழங்கி இருந்தார். அதில் மட்டும் எங்கள் பகுதிக்கு 109 சர்வீஸ் கிடைத்துள்ளது.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

பல வருடங்களாக மின் இணைப்பே கிடைக்காமல் தவித்துவந்த எங்கள் பகுதி விவசாயிகள் பெரிய அளவில் இதனால் பலன் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு 50 இணைப்புகளை வழங்க முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்மூலம் எங்கள் பகுதிக்கு 164 புதிய மின் இணைப்புகள் கிடைக்க உள்ளன.

சில வருடங்களுக்கு முன்னர் மாண்டஸ் புயல் வந்தபோது மதுராந்தகமும் அச்சரப்பாக்கம், செய்யூர் தொகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டன. எங்கள் மதுராந்தகத்தில் மட்டும் புயலால் 559 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.

Madurantakam Assembly Constituency is self-sufficient in electricity demand

உடனடியாக மற்ற மாவட்டங்களிலிருந்து மின் ஊழியர்கள் 250 பேரை வரவைத்தோம். மின்னல் வேகத்தில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இரண்டே நாள்களில் விழுந்த கம்பங்களைச் சரிசெய்தோம். அடுத்த மூன்றாம் நாளே மக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம்.

அந்தக் காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் எடுத்து இந்தத் தொகுதியைக் கவனித்தார். எல்லா வேலைகளையும் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுத்தார். தேவையான மின் உபகரணங்களை வழங்கினார். அதனால்தான் எங்களால் வேகமாகச் செய்யமுடிந்தது.

இதைப்போலவே இன்றுவரை எங்கள் தொகுதியில் மின் பிரச்சினைகள் வராதபடி குழுக்களை அமைக்க உத்தரவிட்டார். அடிக்கடி அமைச்சர் செந்தில் பாலாஜி அந்தக் குழுக்களுடன் மாதம் ஒருமுறை உரையாடி, பிரச்சினைகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு தேவையான புதிய மின் உபகரணங்களை வாங்க அனுமதி அளித்தும் வருகிறார். இதனால் எங்கள் பகுதி மின் தேவையில் தன்னிறைவைப் பெற்றுள்ளது."என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+