Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘பூமாலை’ மூலம் கிடைத்த பணமாலை.. ஸ்டாலின் பக்கம் தாவிய மகளிர்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கலைஞர் 100' நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு பல வகைகளில் தரமாகக் கொண்டாடி வருகிறது.

இது முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் திருவிழாவாக மட்டுமே இல்லாமல், அந்நிகழ்வு பலருக்கும் வாழ்வாதாரம் தரும் ஒரு பொன்விழாவாக மாறி இருக்கிறது.

அதற்குச் சரியான சாட்சி, 'பூமாலை வணிக வளாகங்கள்' திறப்புவிழா நிகழ்ச்சி. இரண்டு நாள்கள் முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வளாகங்களைத் திறந்துவைத்தார்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

பூமாலை வணிக வளாகங்கள் என்பவை விழுப்புரம், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், நாமக்கல், நெல்லை, கடலூர், மதுரை என 26 மாவட்டங்களில் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காகத் திறக்கப்பட்ட வளாகங்கள்.

இவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ரூ. 5.16 கோடி செலவில் புனரமைத்து, இப்போது திறந்து வைத்துள்ளார் ஸ்டாலின்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

இந்தப் பூமாலை வணிக வளாகங்களால், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பல பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. மாவட்டம்தோறும் இயங்கிவரும் சுய உதவிக்குழுக்கள் மஞ்ச பை, தலையாட்டி பொம்மைகள், திருஷ்டி பொம்மைகள், விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பது எனத் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். மரச்செக்கு எண்ணெய், சணல் பைகள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பது அடுத்தகட்ட தொழில் நகர்வுகளுக்கும் பெண்கள் சென்றுள்ளனர். சிலர், நர்சரி நடத்துவது, தையலகம் நடத்துவது, மளிகைக் கடை நடத்துவது தொழில் முனைவோராக உயர்ந்துள்ளனர்.

இப்படிப் பெண்களின் வருமானத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தைக் கூட்ட ஸ்டாலின் திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறார்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ள இந்தப் பூமாலை வணிக வளாகங்களால் எப்படிப் பலன்பெற்றுள்ளன இந்த சுய உதவிக்குழுக்கள்? என்ன சொல்கிறார்கள் அந்தப் பெண்கள்? பேசினோம்.

"இந்தக் கடைக் கிடைத்த பிறகு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அழகழகா நான் தயாரித்த ஹோம் மேட் சாக்லெட்டுகளை அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறேன். அப்படி அடுக்கி வைத்து விற்பனை செய்யும் போதுதான் மனசுக்கு ஒரு மரியாதையே வருகிறது" என்கிறார் புனிதவள்ளி, தாமரை சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர். ஹோம்மேட் சாக்லெட் தயாரிப்பு தொழில் செய்துவருகிறார்கள்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

"எங்களுக்கு என்று தனியே கடை இல்லை; தெருவோரங்களில் கிடைக்கின்ற இடங்களில் மரக்கன்றுகளை வைத்து விற்பனை செய்து வந்தோம். அப்போது எல்லாம் நமக்கு என்று ஒரு கடை இருந்தால் உட்கார்ந்து விற்பனை செய்யலாமே எனக் கனவு கண்டிருக்கிறோம்.

பல இடங்களில் கடைகளைத் தேடி அலைந்தும் இருக்கிறோம். வாடகை 8 ஆயிரம் வரை கேட்பார்கள். எங்களால் அந்தத் தொகையைக் கொடுக்க முடியாது. அந்தளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

ஆகவே கடைபோட்டு விற்பனை செய்வது என்பது எங்கள் குழுவுக்கு எட்டாத ஒரு கனவாகவே இருந்தது. அந்தக் கனவை நிஜமாக்கித் தந்திருக்கிறார் அமைச்சர் உதய் அண்ணா" என்கிறார் ஃபீனிக்ஸ் நாற்றங்கால் பண்ணையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். இவர்கள் அலங்கார செடிகள், மர நாற்றுகள் எனப் பலவற்றை விற்பனை செய்து வருகிறார்கள்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

"அரசு கடைக் கொடுத்திருப்பதைப் பற்றி சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால், நாங்களே முதலாளி ஆன மனநிறைவைக் கொடுத்திருக்கிறது. இத்தனை நாள் தெருத் தெருவாகச் சுற்றி விற்பனை செய்தோம். இனி, அந்தக் கஷ்டம் இல்லை. தைரியமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து நாலு காசு சம்பாதிக்கலாம். வீட்டைக் காப்பாற்றலாம். அது போதாதா?

அதைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்குக் கோடி நன்றி" என்கிறார் குங்குமம் மகளிர் சுய உதவிக்குழு சேர்ந்த ஒரு பெண்மணி. இக்குழு மீண்டும் மஞ்சள் பை'களைத் தயாரித்து வருகிறது.

"உதயநிதி அய்யா எப்ப எங்கள் துறைக்கு அமைச்சரா வந்தாரோ, அப்ப இருந்து எங்களுக்கு நல்ல காலம்தான்" என்கிறார் ரவிக்கைகளுக்குப் பின்னல் வேலைப்பாடுகள் செய்து தரும் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மற்றொரு பெண்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

"நாங்களே சம்பாதிக்கிறோம். நாங்களே நான்கு காசு பார்க்கிறோம். பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம். அதற்கு எல்லாம் இந்த வளாகம்தான் காரணம். எங்களுக்கு வாழ்வு அளித்தது இந்தப் பூமாலைதான். அதைக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி" என்கிறார் மரச் செக்கு எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வரும் குழுவைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்.

"எப்போதாவது ஒரு பொருட்காட்சி போடுவார்கள். அரசு சார்பில் ஏதாவது விழா ஏற்பாடு செய்து தருவார்கள். அந்த நேரங்களில் போய் கடைபோடுவோம். அதன்மூலம் சின்ன அளவில், வியாபாரம் நடக்கும். அதன்மூலம் கொஞ்சம் வருமானம் வரும். இதுவரை எங்களுக்கு என்று தனியாகக் கடை கிடையாது.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

அப்படி ஒரு இடம் இருந்தால்தான் மக்கள் தேவையான நேரங்களில் தேடிவந்து வாங்கிச் செல்வார்கள். நாங்களே போய் திருவிழா நேரங்களில் கடைபோட்டால், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வாங்குவார்கள். ஆகவே கடை தேவை எங்களுக்கு இருந்துகொண்டே இருந்தது.

அதை இப்போதுதான் அரசு செய்து கொடுத்திருக்கிறது. இனி, நிரந்தரமான வாடிக்கையாளர்கள் என எங்களுக்குக் கிடைப்பார்கள். அதன் மூலம் நிலையான வருமானம் கிடைக்கும்.

எங்கள் உழைப்பை நம்பி தைரியமாக வேலை பார்க்கலாம். இதன் மூலம் எங்கள் 7 பேருக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது" என்கிறார் ஆவடி நகராட்சி கோனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

இக்குழு நிறைய சணல் பைகள் தயாரிக்கிறது. அவற்றை விற்பனை செய்ய, மாவட்டம்தோறும் நடைபெறும் பொருட்காட்சிக்குச் சென்று கடைபோடுவார்கள். அதன் மூலம் சின்ன வருமானம் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணம் என்பது சிரமமாக இருந்தது இக்குழு உறுப்பினருக்கு. இப்போது திருவள்ளூர் நகராட்சிக்குள் ஒரு கடை கிடைத்துவிட்டது. அதன் மூலம் மகிழ்ச்சியும் கிடைத்துவிட்டது என்கின்றனர் இக்குழுவைச் சேர்ந்த பெண்கள் அனைவரும்.

 Magalir suya uthavi kulu women have benefited greatly through Poomalai shopping complex

"இந்தப் பூமாலை வணிக வளாகம் என்பது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்டது. அவரது நூற்றாண்டை ஒட்டி இந்த வளாகத்தைப் புதுப்பித்துத் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த நூற்றாண்டு எங்களுக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

இதில் உள்ள கடைகள் அனைத்தும் சுய உதவிக்குழுக்கள் மட்டுமே நடத்துபவை. வாடகை மிகக் குறைவு. ஆகவே எங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி கடைக்கு வாடகைக் கட்ட முடியும். எங்களுக்கும் ஒரு பங்கு வருமானம் கிடைக்கும். இதை ஏற்பாடு செய்து தந்த ஐயா ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" என்கிறார் ஆயத்தை ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதிரா பூக்கள் மகளிர் சுய உதவிக்குழு செண்பகவள்ளி.

இந்தப் பூமாலை வணிக வளாகம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவு ஒன்றில், "வளாகங்களில் கடைகளைப் பெற்றுள்ள சகோதரிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். பெண்கள் நாட்டின் கண்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+