Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக வந்த கல்லூரி மாணவி ஒருவர், மர்மக் கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனங்களை எழுப்பிய நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.. பிப்ரவரி 14ம் தேதி சென்னை வந்த மாணவிக்கு, முதலில் மர்ம நபர்கள் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி, விடுதியில் இருந்து வெளியே செல்லக் காத்திருந்த அந்த மாணவியை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது.

TTV Dhinakaran

திருச்சி டூ சென்னை மாணவி

கடத்தப்பட்ட மாணவியின் முகத்தில் ஒருவித பொடியைத் தூவி மயக்கமடைய செய்த அந்த கும்பல், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவியை வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்..

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மாணவி, தனது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்ச் 10-ம் தேதி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோதும் அந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை.

மீண்டும் 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று, நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே எவரிடமும் சொல்லக்கூடாது என சரமாரியாக மிரட்டியுள்ளனர். இது குறித்து அபிராமபுரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோட்டூர்புரம் போலீஸிலும் புகார் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.

சென்னையின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், பட்டப்பகலில் ஒரு மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது சட்டம் - ஒழுங்கின் சீர்குலைவையே காட்டுகிறது என விமர்சித்து வருகின்றன..

மகளிர் உரிமைத் தொகை 10000 ரூபாய்

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை - பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1, 000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும்.

கல்வி தொடர்பான பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கிருஷ்ணகிரி சிறுமி

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான சூழல் உருவாகியிருப்பதை பார்க்கும் போது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது பச்சிளம் குழந்தையில் தொடங்கி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என கடந்த சில நாட்களில் அன்றாடம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாடு எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கோடை கால சிறப்பு உதவித்தொகை

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்து, இதுவரை இல்லாத நடைமுறையாக கோடை கால சிறப்பு உதவித் தொகை வழங்கி பெண்களை ஏமாற்றிவிட்டால், இதுபோன்று தினந்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சகித்துக் கொண்டு மீண்டும் அவர்கள் தங்களுக்கே வாக்களிப்பாளர்கள் என்ற திமுகவின் தீய எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் துளியளவும் இடமளிக்காத வகையில் தமிழக மகளிர் அனைவரும் வரும் தேர்தலில் மௌனப் புரட்சியை ஏற்படுத்தப் போவது உறுதி.

எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மகளிர் அனைவரும் ஒன்றிணைந்து, பெண்கள் பாதுகாப்பில் துளியளவும் அக்கறையின்றி, முழு நாளும் விளம்பர மோகத்திலேயே மூழ்கிக் கிடக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதும் நிச்சயம்!" என்று பதிவிட்டுள்ளார்..

திடீர் திருப்பம்

இவ்வாறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக, திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் தீவிர விசாரணையில் மன அழுத்தத்தில் அப்படி புகார் அளித்ததாக அம்மாணவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+