Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Stalin is more Dangerous than Karunanidhi..சட்டென எடுத்த சாணக்கிய முடிவு! ரூ.5000ல் அசத்தல் ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தேர்தலின் போது மகளிரின் வங்கி கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதை போல, தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மொத்தமாக 5000 ரூபாய் என பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இதன் மூலம் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சாணக்கியத்தனமாக ஸ்டாலின் செயல்பட்டு இருக்கிறார் என பாராட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மேலும் இதன் மூலம் பல நன்மைகளும் திமுகவுக்கும் கிடைக்கும் என்றும் சொல்கின்றனர்.

தமிழ்நாட்டில் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்ட சம்பவம் மாநில அரசியலில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையிலேயே தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரே நாளில் ரூ. 5,000 வழங்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

Magalir urimai thogai mk stalin Tamil Nadu Assembly Election 2026

மகளிர் உரிமை தொகை

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் தொகை வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் இம்முறை, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கூடுதலான சிறப்புத் தொகை இணைத்து ஒரே தவணையாக ரூ.5000 வழங்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் ஆச்சரியமும் இன்ப அதிர்ச்சியும் உருவானது.

மு.க.ஸ்டாலின் திட்டம்

அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே பலரது வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்ட காணொலி, தேர்தல் காரணமாக நலத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்ற சாத்தியத்தை முன்கூட்டியே கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார். பெண்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே இதன் நோக்கம் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

தேர்தல் நலத்திட்டம்

மேலும், இந்தத் திட்டம் வெறும் நிதியுதவி அல்ல, பெண்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் உரிமை . குடும்பச் செலவுகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெண்கள் தாங்களே நிர்வகிக்க உதவுவதற்கான திட்டம் தொடரும் எனவும், மீண்டும் ஆட்சி அமைந்ததும் இந்த தொகை உயர்த்தி வழங்கப்படுமெனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. பெரும் தொகை ஒரே நாளில் பல லட்சம் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்த போதிலும், முன்கூட்டியே தகவல் கசிவு எதுவும் ஏற்படவில்லை.

திமுக திட்டம்

வங்கி விடுமுறைகளை முன்கூட்டியே கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிர்வாக ரீதியில் திட்டமிட்ட நடவடிக்கை என்பதும் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. சட்ட ரீதியான சூழலும் இந்த முடிவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. தேர்தல் காலத்தில் இலவசங்கள் அல்லது நலத்திட்டங்கள் குறித்து நீதிமன்றத்தில் விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால், முன்கூட்டியே வழங்கப்பட்ட இந்த தொகை எதிர்கால தடைகளைத் தவிர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அரசியல் விமர்சனங்கள்

தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாத சூழல் உருவாகும் என்பதால், அதற்கு முன்பே திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த முடிவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணிக் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. பெண்களின் நலனை முன்னிலைப்படுத்திய நடவடிக்கை என்று பாராட்டப்பட்டுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் இதை தேர்தல் அரசியல் நடவடிக்கையாக விமர்சித்தாலும், நேரடியாக திட்டத்தையே எதிர்க்கும் நிலை உருவாகவில்லை. பெண்கள் நலனைச் சேர்ந்த திட்டம் என்பதால் அரசியல் விமர்சனங்கள் வரம்பிற்குள் தான் இருந்து வருகின்றன.

திராவிட முன்னேற்ற கழகம்

மாநில அரசியல் சூழலில் இந்த நடவடிக்கை கூட்டணி அரசியலுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது. ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தனது சமூக ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர் மனநிலையை நிலைநிறுத்தும் வகையில் இந்த நகர்வு செயல்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மொத்தத்தில், இந்தத் தொகை வழங்கல் ஒரு நலத்திட்ட செயல்பாடாக மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சாணக்கிய நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

பெண்கள் மத்தியில் தாக்கம்

தேர்தல் சூழல், சட்ட ரிஸ்க், நிர்வாக ரகசியம் மற்றும் வாக்காளர் மனநிலை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட முடிவாக இதை அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சூழலில், இந்த நடவடிக்கை அரசியல் கணக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பின்னர் தான் தெரியவரும். ஆனால் பெண்கள் மத்தியில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+