மகளிர் உரிமைத்தொகை: மெசேஜ் வந்தும் அக்கவுண்டில் பணம் ஏறலயா.. இதை பண்ணுங்க.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த மெசேஜ் வந்தும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என பரவலாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், இது தொடர்பாக மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த பிறகு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியது.

எனினும் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் அளிக்கும் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் கடந்த 2023- 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த 1.6 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாளே இல்லத்தரசிகளின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால், இல்லத்தரசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு 18 ஆம் தேதி முதல் மேசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் வரும் 18 ஆம் தேதி முதல் இ சேவை மூலமாக மேல் முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இதனிடையே, மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக மெசேஜ் வந்தும், வங்கி கணக்கில் பணம் வரவு ஆகவில்லை என்று பரவலாக புகார் எழுந்ததாக தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications