மகளிர் உரிமைத் தொகை.. இனி "இவர்களுக்கு" மட்டும் ரூ.1000? அரசு திட்டம், வரிப்பணம் குறித்து அதிமுக நச்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இந்த விரிவாக்கம், "யாரும் தவற விடப்படக் கூடாது" என்ற நோக்கில் அரசு எடுத்து வரும் இன்னொரு முக்கியமான சமூகநல நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது... இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. எனினும், அனைவருக்குமே இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அதிமுக சில முக்கிய கேள்விகளை தற்போது எழுப்பி உள்ளது.
குடும்பச் செலவுகளுக்கு உதவும் இந்த மாதாந்திர நிதி உதவி, பெண்களின் பொருளாதார சுயநிலையை உறுதி செய்யும் முக்கியத் திட்டமாக பார்க்கப்படுகிறது....

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்
அதுமட்டுமல்ல, இந்த திட்டம் தற்போது விரிவாக்கப்பட உள்ளது. ஆரம்ப கட்டத்தில் பல காரணங்களால் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள், காலக்கெடுவை தவறவிட்ட பெண்கள் ஆகியோரை உள்ளடக்குவதே இந்த விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், இதுவரை பயன்பெறாத அதிகமான பெண்களை சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் முக்கிய அம்சமாக, வருவாய் குறைவான பின்னணி கொண்ட ஓய்வூதியதாரர் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது... இதனால், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் போன்ற உதவிகளை மட்டும் நம்பி வாழும் பெண்களுக்கு, இந்த உரிமைத் தொகை கூடுதல் ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
பெண்கள் வாக்கு வங்கி
மொத்தத்தில் இந்த உதவித்தொகையானது, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் நிம்மதியை அளிக்கும் திட்டமாக திகழ்ந்து வருகிறது.. இது திமுக அரசுக்கு பெண்களின் மத்தியில் மிகப்பெரிய வாக்கு சதவீதத்தை பெற்று தந்துள்ளது..
ஆனால், இந்த திட்டத்தை கொண்டு வந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் பலவிதமான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.. தகுதி அடிப்படையில் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்குமே இந்த உரிமைத்தொகை சென்றடைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
இப்படிப்பட்ட சூழலில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் உரிமைத்தொகை திட்டம் குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக பிரத்யேக அறிக்கையையும் இன்று வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில், "இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜனநாயக இலக்கணம் - மக்களின் வரிப்பணம்
அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.. மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார்
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கே
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது.
இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்..
-
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications