Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய்.. இதுவரை வாங்கவே இல்லையா? விரைவில் வெளியாகப் போகும் குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு குறித்த அறிவிப்பும், விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் மாதம் தோறும் தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதில் மிக முக்கிய வாக்குறுதியாக இது பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை என்று அழைக்கப்படும் இந்த திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது.

scholarship tamil nadu government

1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. முதல்வர் மு.க ஸ்டாலின் இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். விடுபட்டவர்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படது.

அதன்படி கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்பட்டது. இப்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகையை பெற அரசு நிர்ணையித்து இருந்த தகுதிகள் இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக பெண்கள் சிலர் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக எம்எல்ஏக்களிடமும், அமைச்சர்களிடமும் முறையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், நடந்து முடிந்த சட்டசபை தொடரின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வு குறித்த அறிவிப்பும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் எனவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் விடுபட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதால் பயனாளிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையே, மகளிர் உரிமை தொகைத் திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. பிற மாநிலங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி இதை விட கூடுதலாக உள்ளது. எடுத்துக்காட்டாக கர்நாடாகவில் 1,500 வழங்கப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டிலும் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+