எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது.. குடும்ப தலைவிகள் எல்லாருக்கும் ரூ.1000 கொடுங்க.. எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை பொம்மை முதல்வருக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த 1 கோடி குடும்ப தலைவிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

 Magalir urimai thogai should be given to all Women Aiadmk edappadi palaniswami urges to MK Stalin

இதனிடையே, குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ. ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது. ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகையினை வழங்காமல் காலம் தாழ்த்தியது விடியா திமுக அரசு. தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதன் நோக்கம் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற பெற உள்ளது.

 Magalir urimai thogai should be given to all Women Aiadmk edappadi palaniswami urges to MK Stalin

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மகளிர் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைப்பது திமுக அரசின் நப்பாசை எண்ணம். மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியதால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 10 ஆயிரம் வரை செலவு கூடியுள்ளது. தமிழகத்தில் பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்குவது ஏமாற்று வேலை.

தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கும்மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக விடியா திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின் வாய் பந்தல் போட்டுள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+