Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கோடி பெண்கள்.. ஸ்டாலின் வழங்கிய மெகா பொறுப்பு.. உதயநிதி எதிர்கொள்ள போகும் சவால்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கே முக்கியமான திட்டத்தை அடுத்த 2 மாதங்களில் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பை சிக்கல் இல்லாமல் உதயநிதி நிறைவேற்றினால் அது நாடாளுமன்ற தேர்தலிலும், அதன் பின்னர் வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும். ஆனால் இந்த திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல.

magalir urimai thogai: Why did Chief Minister Stalin hand over to Minister Udayanidhi Stalin?

ஏனெனில் திட்டம் முழுமையாக ஏழை எளிய பெண்களுக்கு போய் சேர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, கலைஞர் டிவி வழங்கிய போது, ஏழைகளுக்கு மட்டும் தான் இந்த டிவி என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. காரணம் இதில் அரசியல் செய்து, ஏதாவது ஒரு வகையில் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் அப்படி அறிவிக்கவில்லை.

ஆனால் ஸ்டாலினோ அப்படி இல்லை. ஏழைகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஏனெனில் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் தருவது என்பது பொருளாதார ரீதியாக சிக்கலான விஷயம். எனவே பொருளாதார கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஏழை பெண்கள் ஒவ்வொருவரையும் தேர்வு செய்து அவர்களுக்கு 1000 தர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் இந்தியாவில் எங்குமேஇல்லாத முன்னோடி திட்டம். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எப்படி செயல்படுத்த போகிறது என்பதை மற்ற மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த சூழலில் தான் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலிலினிடம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.

நேரடியாக மாவட்ட ஆட்சி தலைவர்கள் தான் திட்டத்தின் பயனாளிகளை தேர்வு செய்ய போகிறார்கள். இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அதேநேரம் ஏழைகள் யாரும் விடுபடாமல் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில்
தமிழ்நாடு அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை .

இதிலும் நிச்சயம் அரசியலும் உருவாகும். ஏழையான என் பெயர் வரவில்லை.. உன் பெயர் வரவில்லை என்று போர்க்கொடி உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது. அவர் என்னைவிட வருமானம் அதிகம் உள்ளவர், அவருக்கு கிடைக்குது .. எனக்கு கிடைக்கவில்லை என்று குரல்களும் வரும். ஆனால் அதை சரியாக கையாண்டு வெற்றிகரமாக திட்டத்தை நிறைவேற்றினால், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பலமாக இருக்கும். சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு பெரிய பலமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இதனிடையே இந்த திட்டம் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதல்-அமைச்சர் அலுவலகத்தையோ, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ள அமைச்சர் உதயநிதியையோ அல்லது என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை. அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+