Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்டர் வந்ததுமே ஹாஸ்பிட்டலுக்கு ஓடிய வழக்கறிஞர்கள் டீம்.. மேலிடத்துடன் அவசர ஆலோசனை.. ஒரே பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக லீகல் விங் பரபர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், நேற்று இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Magistrate to investigate senthil balaji in hospital: DMK legel wing consults

இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை முறையிட்டார்.

அப்போது, நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப் பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கைது நடவடிக்கையின்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்த அவசர வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி சக்திவேல், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து தான் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையிட்டனர். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வை அமைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மாலை 5 மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செல்கிறார். நேரில் சென்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ மற்றும் திமுகவைச் சேர்ந்த 4 வழக்கறிஞர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவர்கள் குழு சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

திமுகவின் வழக்கறிஞர்கள் குழுவை சேர்ந்த எம்.பி என்.ஆர்.இளங்கோ, சரவணன் அண்ணாதுரை, துரை கண்ணன், குமரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது குறித்து அமலாகத்துறையிடம் கோரிக்கை வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மேலிடத்துடன் தீவிர ஆலோசனையில் திமுக வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+