மகாளய அமாவாசை! ராமஸே்வரத்திற்கு திதி கொடுக்க போறீங்களா! உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமஸே்வரத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பித்ருக்களுக்கு திதி கொடுக்க ஒருவர் கட்டாயம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ராமஸே்வரத்திலும் காசியிலும் கொடுத்து மூதாதையர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பார்கள். அதாவது வடஇந்தியரகள் காசியில் திதி கொடுத்துவிட்டு ராமேஸ்வரத்திற்கு வருவர்.

தென்னிந்தியர்கள் ராமேஸ்வரத்திற்கு முதலிலும் பிறகு காசியிலும் கொடுக்க வேண்டும் என்பார்கள். இவை எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் செல்ல வேண்டும் என்றில்லை, தங்களால் எப்போது இயலுமோ அப்போது செல்லலாம்.
அந்த வகையில் புண்ணிய ஷேத்திரமான ராமேஸ்வரத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசைகளின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் மகாளய அமாவாசையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும். மகாளய பட்சம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. இது 10 நாட்களுக்கு இருக்கும்.
இந்த 10 நாட்களும் இறந்த முன்னோர்களை அவரவர் வீடுகளுக்கு சென்று வர எமதர்மர் அனுப்புவார் என்பது ஐதீகம். எனவே இந்த 10 நாட்களிலும் காகத்திற்கு உணவு அளிக்க வேண்டும். வீடு வாசலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த 10 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அவர்கள் இறந்த திதி வந்தால் அன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முன்னோர்களின் மனம் குளிர்ந்தால் நம் குடும்பம் செழிப்பாக வளரும். செல்வமும் பெருகும். இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி மஹாளய அமாவாசை ஆகும். அங்கு பித்ருக்களுக்கு நீர் நிலைகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதற்காக பலர் காவிரி படித்துறைகளுக்கும், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கும் செல்வார்கள். அது போல் ராமேஸ்வரத்திற்கு சென்று திதி கொடுத்துவிட்டு நீராடி பிண்டத்தை அக்னி தீர்த்தக் கடலில் கரைப்பார்கள். அதன் பிறகு 22 குளங்களிலும் நீராடுவார்கள்.
இந்த நன்னாளில் ராமேஸ்வரத்திற்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவர். இதற்காக 13ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அது போல் 14 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூர், சென்னை, சேலம், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications