மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகம் போட்ட ஸ்ட்ராங் பேஸ்மென்ட்! தாக்கு பிடிப்பாரா தேமுதிக வேட்பாளர்?
விழுப்புரம்: மைலம் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசனும் மோதுகிறார்கள். இதில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை பார்த்துவிடலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி நிமிட பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த சூழலில் நாம் மைலம் தொகுதி நிலவரத்தை காண்போம்.

பொதுவாக ஒரு தொகுதிக்கு ஒருத்தர் புதுசா வந்தா "யார்டா இவரு?"ன்னு கேட்பாங்க. ஆனா மைலத்துல இப்போ நிக்கிறது அ.தி.மு.க-வோட பவர்ஃபுல் முகம் சி.வி. சண்முகம். 2021-ல் விழுப்புரத்தில் நூலிழைத் தோல்வியைச் சந்திச்ச சண்முகம், இப்போ பயங்கர ப்ளான் போட்டு அவரோட கோட்டையான திண்டிவனம் பக்கத்துல இருக்கிற மைலத்துல இறங்கியிருக்காரு.
இதுல ஹைலைட்டே, ஏற்கனவே அங்கே எம்.எல்.ஏ-வா இருந்த பா.ம.க-வோட சிவக்குமார், சண்முகத்துக்காக அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துட்டு விக்கிரவாண்டிக்கு ஷிப்ட் ஆகிட்டாரு. சண்முகம் சும்மா வரலை; கடந்த சில வருஷமாவே எம்.பி. நிதியை வச்சு அங்கே செம கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்காரு.
சண்முகத்தை எதிர்க்குறது யார் என பார்த்தால், தி.மு.க கூட்டணியில இருக்கிற தே.மு.தி.க வேட்பாளர் எல். வெங்கடேசன். இவரும் கத்துக்குட்டி இல்ல; திருக்கோவிலூர் முன்னாள் எம்.எல்.ஏ!
தி.மு.க + வி.சி.க + கம்யூனிஸ்ட் கூட்டணியோட பலம் இவருக்குப் பெரிய பிளஸ். கேப்டன் விஜயகாந்த்தோட பாரம்பரிய வாக்குகளை வச்சு 'சிக்ஸர்' அடிக்கப் பார்க்குறாரு வெங்கடேசன்.
சாதி ரீதியா பார்த்தா, வன்னியர் வாக்குகள் சண்முகத்துக்கும், நாயுடு சமூக வாக்குகள் வெங்கடேசனுக்கும் ஒரு பேஸ்மெண்ட்டா இருக்கு.
இந்த ரெண்டு பெரிய கட்சி வேட்பாளர்கள் மட்டும் இல்லாம, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக விஜய் விக்ரமும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக விஜய் நிரஞ்சனும் களத்தில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர்: ஊழல் எதிர்ப்பு, விவசாய வேலைவாய்ப்புன்னு இளசுகளைத் தட்டி எழுப்புறாங்க.
தவெக: கடனைத் தள்ளுபடி செய்வோம், புது வேலை கொடுப்போம்னு சொல்லி முதல் முறை வாக்காளர்களை குறி வைக்கிறார்கள்.
மைலம்னா அது விவசாயிகளோட பூமி. 130 கிராமங்கள், விடூர் அணை, சங்கராபரணி ஆறுன்னு விவசாயத்தை நம்பி இருக்குற ஏரியா. இங்கே இருக்குற மக்களுக்குத் தேவையெல்லாம் இதுதான்:
புதுசா தடுப்பணைகள் கட்டணும்.
அரசு அலுவலகங்கள், கல்லூரி, மருத்துவ வசதிகள் வேணும்.
அ.தி.மு.க-வோட ஃப்ரீ சிலிண்டர், ₹10,000 உதவித்தொகை ஸ்கீம் எல்லாம் சண்முகத்தைக் கரை சேர்க்குமா? இல்ல, தி.மு.க-வோட ஆளுமை வெங்கடேசனுக்குக் கைகொடுக்குமா? 'நிழல் மந்திரி' சண்முகத்துக்கே இது ஒரு கௌரவப் போர்.
மொத்தத்துல மைலம் தொகுதி இப்போ ஒரு அரசியல் பரிசோதனை கூடம் மாதிரி மாறியிருக்கு. முடிவை மக்கள் தான் சொல்லணும். வெயிட் பண்ணிப் பார்ப்போம்!












Click it and Unblock the Notifications