சென்னை கடற்கரை - செங்கல்பட்டு 28 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னையில் தங்கி வசித்து வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

பண்டிகை, விடுமுறை என எல்லா தேவைகளுக்கும் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் போக்குவரத்து சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. ஒரு நாள் ரயில் சேவை பாதித்தாலும் சென்னையே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு ரயில் போக்குவரத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர்.கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான மக்களும் தினமும் சென்றுவர மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்புக்கு தெற்கு ரயில்வே முக்கியப் பங்காற்றி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதி மக்களை நகரத்துக்கு செல்ல பெரும்பாலும் மின்சார ரயில் சேவையே பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 20-25 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் ரயில்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன.
இந்நிலையில், ரயில்களைப் பராமரிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் ரயிலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்புக்காக அவ்வப்போது ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் - கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூர் - சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இரயில்வே நிலையங்கள் இடையே 23ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே, இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் நவம்பர் 23 ஆம் தேதி வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications