"நிறம்" மாறுகிறாரா எடப்பாடி.. திமுக பக்கம் சாய்கிறார்.. பிளானே இதுதானாமே.. திரியை கொளுத்திய பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கேசி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமியும், முக ஸ்டாலினும் கைகோர்த்து அரசியல் செய்கிறார்களா? என்ற சந்தேகத்தை மூத்த தலைவர் கேசி பழனிசாமி கொளுத்தி போட்டுள்ளார்.
தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்றைய தினம் சோதனை நடத்தினர்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது.. ஆனால், சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

ஒரே டவுட்
ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில் 250 படுக்கை வசதிகளுடன் 2 வருடங்களாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இந்த ரெய்டு நடந்தது.. எனினும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஏன் 2 கொங்கு மாஜி அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது.

நிறம் + கலர்
இதனிடையே, மூத்த தலைவர் கேசி பழனிசாமி இதுகுறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமாகட்டும், அம்மாவின் ஆரம்ப காலமாகட்டும், லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டு இருந்தது இந்த கட்சி.. ஆனால், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மற்றும் அந்த "மணிகள்" என மணிகளுக்கான அரசாங்கமாகவே இது மாறிவிட்டது.. இவர்கள் காலத்தில்தான் ஊழல்கள் பெருக்கெடுத்தது..

ஹைவேஸ்
அம்மா காலத்தில் இப்படியான விவகாரங்கள் இருந்தாலும், அதை தாண்டி வெற்றி பெறும் வலிமையை அவர் பெற்றிருந்தார்.. எடப்பாடி மீதே இன்னும் நிறைய கேஸ் இருக்கே.. ஹைவேஸ், கொடநாடு என இவ்வளவும் இருக்கு.. அதனால்தான், லஞ்ச ஊழலுக்கும் அப்பாற்பட்ட ஒரு தலைமை அதிமுகவுக்கு தேவை.. அதிமுக என்பது, சாதி மதத்துக்கு, லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி.. இப்படிப்பட்ட லஞ்ச பேர்வழிகள் மீதுநடவடிககை எடுப்பதை, அனைத்து தொண்டர்களும் வரவேற்கவே செய்வார்கள்..

மடியில் = லோடு
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்கிறாரே எடப்பாடி.. "உங்க மடியில் நிறைய லோடு இருக்கு"ன்னு ஸ்டாலின் சொல்லனுமா இல்லையா? ஏன் சொல்லல? கொடநாடு விஷயத்தில் உண்மை குற்றவாளி கண்டுபிப்பேன், நான் கலைஞரின் மகன் என்றெல்லாம் சொன்னாரே.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார் ஸ்டாலின்.. அப்படியென்றால், எடப்பாடி பழனிசாமி மட்டும் தனக்கான பாதுகாப்பை தேடிக் கொண்டாரா? அல்லது ஒருவேளை அதிமுகவை நல்லவிதமாக பிளந்து, அதன்மூலம் அதிமுகவின் வாக்குகளை சிதறடித்து, மறைமுகமாக திமுகவின் வெற்றிக்கு உதவ போகிறாரா? என தெரியவில்லை..

விஜயபாஸ்கர்
அதிமுக ஆட்சிக்கு வரணும் என்று எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் நினைக்கவில்லை.. கட்சி தனக்கு வரணும், சம்பாதித்த பணத்தை பாதுகாத்து கொள்ளணும், கைது நடவடிக்கைக்கு உட்படக்கூடாது என்பதே அவரது எண்ணமே.. விஜயபாஸ்கரோடு சேர்த்து அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்காளே, ஏன் வேலுமணியுடன் சேர்த்து அந்த அதிகாரிகளிடம் ரெய்டு நடக்கவில்லை? ஏனென்றால், அந்த அதிகாரிகள், தற்போது திமுக அமைச்சர்களுக்கு முறையான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்..

திராவிடமா + இந்துத்துவாவா
திராவிடமா? இந்துத்துவாவா? திமுகவா? பாஜகவா? இந்த அடிப்படையில் கொண்டு போக வேண்டும் என்று மட்டுமே ஸ்டாலின் நினைக்கிறார்.. இதற்கு எடப்பாடியும், அதிமுகவை எந்த அளவுக்கு பிளக்க முடியுமோ, அந்த அளவுக்கு இயக்கத்தை பார்த்துக் கொள்வார் என்றும் ஸ்டாலின் நம்புகிறார்.. இப்படி மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஒரு போக்கு காட்டிக் கொண்டால், திமுக அரசாங்கம் ஊழலற்ற அரசாங்கமாக இருக்கும் என வெளித்தோற்றத்தை ஏற்டுத்த முனைகிறார் ஸ்டாலின். மற்றபடி வேறு ஒன்றுமில்லை.. அதுக்கேற்றபடி, இந்த மாஜிக்களும், திமுக மீதான ஊழல் கேஸ்களை பற்றி, பாயிண்ட்களுடன் புள்ளிவிவரங்களுடன் பேசுவதும் இல்லை..

எம்ஜிஆர் + கலைஞர்
சிவி சண்முகம் தேர்ந்த வழக்கறிஞர்.. ஆனால், புள்ளிவிவரங்களுடன் பேசுவதில்லை.. எம்ஜிஆர் காலத்தில், கலைஞர் ஆட்சியைதான் ஊழல் அரசு என்று சொல்லுவோம்.. ஆனால், அந்த பழி இன்று அதிமுக மீது சுமத்தப்பட்டுள்ளது.. அதனால், இந்த ஊழல்வாதிகளை முதலில் அதிமுகவில் இருந்து களைய வேண்டும்.. ஓபிஎஸ் இதெல்லாம் பார்த்து மகிழ்ச்சி கடலில் இருப்பார்" என்றார் பழனிசாமி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications