ஜுன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.. கடைகள் செயல்படலாம்.. ஸ்டாலின் அதிரடி

தளர்வுகள் நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    June 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் Lockdown நீட்டிக்கப்படும்- Mk Stalin | Oneindia Tamil

    தமிழகத்தில், கொரோனா 2வது அலை பரவல் அளவுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஒருநாளைக்கு இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 35 ஆயிரத்தை தாண்டியது.

    உயிரிழப்புகளும் அதிகமாகின.. அதனால்தான், தொற்று பரவலை குறைக்க, மருத்துவ நிபுணர்கள், சட்டசபை கட்சி தலைவர்கள் ஆலோசனைப்படி, கடந்த மாதம், 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    தொற்று

    தொற்று

    இதற்கு நல்ல பலன் கிடைத்தது... தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. சென்னைதான் முதல் இடத்தில் இருந்தது.. அங்கு தொற்று பாதிப்பு பாதிக்கும் கீழே குறைந்து வருகிறது.. ஆனால், அதேபோல பல மாவட்டங்களிலும் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது.. டிஸ்சார்ஜ்களும் அதிகமாகி வருகின்றன.

    கோரிக்கை

    கோரிக்கை

    நேற்று கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 22 ஆயிரத்து, 651 ஆக குறைந்தது... தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, 7ம் தேதி காலை, 6 மணியுடன் முடிவடைகிறது... அதனால், நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    மற்றொரு பக்கம், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. யார் கையிலும் காசு இல்லை.. அதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.. எனவேதான் இதுகுறித்து ஒரு முடிவு செய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2 நாட்களாகவே அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    நேற்றைய தினம், இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை டிஜிபி. திரிபாதி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பரிந்துரை

    பரிந்துரை

    சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை. எனவே ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்வது சரியாக இருக்கும் என்ற பரிந்துரையை சுகாதாரத்துறை சார்பாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.. அதன்படி ஜூன் 14-ம்தேதி வரை தர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    தளர்வுகள்

    தளர்வுகள்

    ஜூன் 7-ந் தேதி முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். பழங்கள், பூகடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங் அன்னுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தொற்று

    தொற்று

    அதேசமயம், ஊரடங்கு உத்தரவால் ஜூன் 14ம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-பதிவு பெற்று வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+