தலைமை செயலாளர் இறையன்பு போட்ட புது உத்தரவு.. அதிகாரிகளுக்கு பறந்த வந்த "கண்டிஷன்"..!
தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
சென்னை: அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது.. இந்த பட்ஜெட் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் அதிகரித்து வந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் பிடிஆர் தன்னுடைய பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.. முன்னதாக, திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்.

முக ஸ்டாலின்
பட்ஜெட் துவங்கும் முன்பு, அக்கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை எவ்வாறு சட்டப்பேரவையில் பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம்.. சென்ற முறையும் இப்படித்தான் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.

மரபுகள்
ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளை, சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதற்கான தரவுகளை கையில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.. அவை மரபுகளை மதித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி தர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.. அதனால்தான் கடந்த முறை கூட்டத்தொடர் மிகவும் அரசியல் நாகரீகத்துடன் இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர்களே புகழ்ந்தனர்.

கேள்விகள்
இந்த முறை கண்டிப்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில், காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு கேள்விகள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி, அரசிடம் இருந்து பதில் கோர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.. எனினும், திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமே இத்தகைய பொறுப்பு இல்லாமல், அதிகாரிகளுக்கும் சட்டசபையில் பொறுப்புகள் உள்ளது..

சென்னை
அதனால்தான், அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும், துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.. அந்த சுற்றறிக்கையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்காக மார்ச் 18 (இன்று) சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம்.

கட்டுப்பாடு
எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து, அனைத்து அதிகாரிகளும் அலர்ட் ஆகி உள்ளனர்.. தங்கள் துறைசார்ந்த விவரங்களையும் கையில் எடுத்து வருகின்றனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications