"ஃபுல் பவர்".. உங்களை நம்பி தான் ஒப்படைத்துள்ளேன்.. கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.. இதில், உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும், போதை பொருள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி என்று திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், போதைப்பொருள் புழக்கத்தையும் விமர்சித்தே வருகின்றன.
திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கிளர்ச்சியை தடுக்க முடியவில்லை, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிமுக குற்றச்சாட்டுகளை கூறியதுடன், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.

அன்புமணி
அதேபோல, தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அதிகரித்துவிட்டன, கஞ்சா, மாத்திரை, ஊசி போன்ற போதைப்பொருட்கள் மாணவர்களிடம் அதிகமாக புழங்குகிறது என்று குற்றஞ்சாட்டியும், தமிழகத்தில் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வலியுறுத்தியும் பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது... போதைப்பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அன்றைய தினம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றும் விடுத்திருந்தார்.

லெட்டர் எழுதிய ஸ்டாலின்
இந்நிலையில்தான், போதைப்பொருளை முற்றிலுமாக தடுக்கும் கடிவாளத்தை கையில் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.. மேலும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவர்களுக்கு முதல்வர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.. மேலும், போதைப்பொருள் கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கைது செய்ய வேண்டும் என்று போதைபொருள் தடுப்பு விவகாரத்தில் டிஜிபிக்கு முழு சுதந்திரம் தந்து உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வந்தன.

சைலேந்திர பாபு
இதையடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு களமிறங்கினார்.. போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலை தடுத்து நிறுத்தும் வகையில், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.. இதன்மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுத்தும், கடத்தியவர்களை உடனுக்குடன் கைது செய்தும் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்...

திருச்சி திமுக
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை சோதனையிலும் காவல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் கஞ்சா கடத்தலும், கஞ்சா விற்பனை செய்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. நேற்று முன்தினம்கூட, 2 கிலோ கஞ்சாவை திமுக பிரமுகரே காரில் வைத்து கடத்தி பிடிபட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

கலந்தாய்வு
இந்நிலையில்தான், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அத்துடன் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக, அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கு பெறும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேஜர் அறிவிப்பு
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் இக்கூட்டம் துவங்கியது.. தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. அப்போது மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

ஒப்படைத்துள்ளேன்
முதல்வர் பேசும்போது, "போதை என்பது தனி மனித பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை.. போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும்.. போதைப்பழக்கம்தான் பல்வேறு குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது .. உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளதாகவும், போதை பொருள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications