Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கூமுட்டை".. ரூ. 666 கோடியாமே.. எடப்பாடியை திணறடித்த "திமிங்கலம்".. இங்கேயே வரப்போறாராமே.. போச்சுடா

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் மீண்டும் அதிமுகவில் இணைய முடிவெடுத்து விட்டாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஷாக் தகவல் ஒன்று, ஓபிஎஸ் டீமிடம் இருந்து பறந்து வந்துள்ளது.. ஏற்கனவே தலைவலியில் உள்ள எடப்பாடிக்கு, இந்த தகவல் மேலும் தலைவலியை உண்டுபண்ணியும் வருகிறது.

மருது அழகுராஜ் - ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர்.. இவரும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள்... அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த 'நமது எம்ஜிஆர்' நாளிதழின் ஆசிரியராக இருந்தவர்தான் மருது அழகுராஜ்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அந்த பத்திரிகையை சசிகலா தரப்பினர் நிர்வாகம் செய்யத் தொடங்கினர்.. எனினும், கடுமையான விமர்சனங்களை சசிகலா மீது வைத்து வந்தார் மருது அழகுராஜ்.. இதன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் வெளியேற்றப்பட்டார்.

 தடாலடி டிஸ்மிஸ்

தடாலடி டிஸ்மிஸ்

பிறகு, ஓபிஎஸ்- எடப்பாடி வசம் அதிமுக சென்றதும் "நமது அம்மா" என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்... 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு தரப்பட்டது.. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சீட் தரப்பட்டது.. ஆனால், தோல்வி அடைந்து விட்டார்.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

 பதறாத பண்பு

பதறாத பண்பு

இதையடுத்து நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்திருந்தார்... இறுதியில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ், அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார்.. இதுகுறித்து ஒரு பதிவும் வெளியிட்டிருந்தார்.. அதில், "எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்... இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி... என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.. மருது அழகுராஜின் இந்த திடீர் பதவி விலகல் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது.

 சுத்தத் தங்கம்

சுத்தத் தங்கம்

மருது அழகுராஜை பொறுத்தவரை தமிழின்மீது தீரா காதல் உடையவர்.. அவரது மொழியே பலரையும் ஈர்த்துவிடும்.. எடப்பாடியை திட்டுவதானால்கூட, கவிதையிலேயேதான் விமர்சிப்பார்.. அதேசமயம், நாகரீக பேச்சையும் கண்ணியத்துடனேயே வெளிப்படுத்துவார்.. இதுவரை இவர் தந்த பேட்டிகளை எடுத்து பார்த்தால், ஓபிஎஸ்ஸை எங்கேயும், விட்டுத்தந்திருக்கவே மாட்டார். நம் ஒன் இந்தியா தமிழுக்கு இவர் ஸ்பெஷல் பேட்டி தந்தபோதுகூட, "செப்பு கலக்காத சுத்த தங்கம், பதறாத பண்பாளர், பெரியகுளத்தில் பிறந்த பெரிய மனதுக்காரர்" என்றெல்லாம் ஓபிஎஸ்ஸின் குணங்களை புகழ்ந்து பேசினார்.

 கூமுட்டை

கூமுட்டை

அதேபோல எடப்பாடியை விமர்சிப்பதானாலும், "சுயநல வெறிபிடித்த மனநோயாளி.. முரண்பாடுகளின் மொத்த உருவம்.. அவரிடம் வீரம் இல்லை, ஈரம் இல்லை, தியாகம் இல்லை, அரவணைப்பு இல்லை, அறிவு இல்லை.. பொது அறிவும் இல்லை, பொதுவாகவே அறிவும் இல்லை, திராவிட இயக்கத்தின் கூமுட்டை தலைவன்" என்று வெளிப்படையாகவே போட்டுத்தாக்குவார்.. அதுமட்டுமல்ல, எடப்பாடி எதற்காக டெல்லிக்கு ஓடினார் என்பதை முதன்முதலில் மீடியாவிடம் பகிரங்கப்படுத்தியதே இவர்தான்..

 666+ டெண்டர்

666+ டெண்டர்

எடப்பாடியின் சம்பந்தி மகன் மீது 12 கோடி ரூபாய் லஞ்சப்புகார் உள்ளது.. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை கொண்டு போய், தந்துள்ளார்.. ஏற்கனவே சம்பந்திக்கு நெடுஞ்சாலையில் 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு, இங்கே நம் மாநில அரசிடம் உள்ளது.. உப்பை தின்னவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும" என்றும் காட்டமாக கூறியிருந்தவர்.

 ஹெவி தலைவலி

ஹெவி தலைவலி

மருது அழகுராஜ் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் எடப்பாடி தரப்புக்கு டென்ஷனையும், கடுப்பையும் ஏற்படுத்தி வந்த நிலையில்தான், திடீரென அவர் பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகின.. ஆனால், இப்போது இன்னொரு செய்தி வட்டமடித்து வருகிறது... ஓபிஎஸ்சை நேற்று சந்தித்து பேசினாராம் மருது... அப்போது, கழகத்தில் இருந்து இவர் விலகுவதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவேயில்லையாம்.. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று நிறைய அட்வைஸ்களை செய்துள்ளார் ஓபிஎஸ்.. இதனை அடுத்து, விலகல் முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டு மறுபடியும் அதிமுக அரசியலை முன்னெடுக்கவிருக்கிறார் மருது அழகுராஜ்... ஆக, எடப்பாடி & டீமுக்கு மறுபடியும் தலைவலி ஆரம்பம் போல..!!

சக்ஸஸ்

சக்ஸஸ்

அதற்கேற்றபடி, மருது அழகுராஜ் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.. அதில், "நாளை முதல் களத்தில்.. அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த என்னை அழைத்தார் அண்ணன்.. விலகலுக்கான விவரம் கேட்டார்.. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மனஉளைச்சல் உடல் சோர்வு குடும்பத்தாரின் வேதனைகள் இவற்றை கருத்தில் கொண்ட முடிவு என்றேன்.. உங்கள் எழுத்தும் பேச்சும் தொடர வேண்டும், சகோதரன் நான் இருக்கிறேன்.. வேதனைகள் கழுத்தை நெரிப்பது வெற்றியை நாம் நெருங்குவதை கூறுகிற சகுனம் என்றார். விலகுதல் என்கிற பேச்சே இனி இருக்கக் கூடாது அயற்சியை அப்புறப்படுத்திவிட்டு முயற்சியை முன் எடுங்கள் அம்மா ஆசி உங்களுக்கு உண்டு.. என் அன்புக் கட்டளை இது என்றார்.

 உயிருள்ளவரை

உயிருள்ளவரை

நாளைக்கு காளையார்கோவிலுக்கு அவசியம் வாங்க.. மருதிருவரை வழிபட்டு மருதுவின் மறுபிரவேசம் தொடங்கட்டும் என்றார்.. கசியும் கண்ணீரோடு ஆமோதித்தேன். எடப்பாடி ஏற்படுத்திய பிளவு ஓ.பி.எஸ் என்னும் மகத்தான மனிதரின் உன்னதத்தை உணர வைத்தது. உயிருள்ள காலம் வரை கழகத்திற்கு உழைக்க வேண்டும் என்னும் உறுதியை குருதியில் தீர்க்கமாய் உறைய வைத்தது. குறிப்பாக என்னை விடாமல் துரத்தி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் என உரிமை வேண்டுகோள்களால் என்னை உருக வைத்த நட்புக்கும் உறவுக்கும் நன்றி.. நாளை முதல் களத்தில்.." என்று மருது அழகுராஜ் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+