116000.. அதே நாள்.. அதே மாதிரி.. 3 லீடர்களின் மேஜர் மூவ்.. அதென்ன 3 பக்க ரகசியம்.. ஓவர்டேக் எடப்பாடி

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய கடிதம் எழுதியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் பொன்விழாவை எப்படி கொண்டாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சற்று வேகமெடுத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக, கட்சியின் பொன்விழாவை கொண்டாட அதிமுக திட்டமிட்டு வருகிறது.. வருகிற 17ம் தேதி அதிமுக பொன்விழா நிறைவு விழாவை விமர்சியாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது..

எனவே, தங்களின் வலிமையை மற்றவர்களுக்கு நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா மூவரும், மூன்று ரூட்டுகளில் திட்டமிட்டுள்ளனராம்..

தோட்டம்

தோட்டம்

அதன்படி, சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர்-ஜானகி அம்மாள் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி கொண்டாட எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். இந்த கல்லூரி நிர்வாகம் எம்ஜிஆரின் குடும்பத்தினரான லதாராஜேந்திரன், மகனான குமார் ராஜேந்திரனின் கையில் உள்ளது.. ஆனால், அவரோ சசிகலா அணியில் உள்ளார்.. எனவே, எடப்பாடி பழனிசாமியின் திட்டத்திற்கு இவர் அனுமதிப்பது சந்தேகம் என்கிறார்கள்...

 ராமாவரம் + தோட்டம்

ராமாவரம் + தோட்டம்

அதுமட்டுமல்ல, பள்ளி கல்லூரி வளாகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி ஆகியவை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அரசாணையே இருப்பதால், அடுத்தக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறது.. அடுத்து சசிகலாவும், அதிமுக பொன்விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் இருக்கும் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார். அதாவது, எம்ஜிஆர் தோட்டத்தில் தான் நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளநிலையில், பள்ளிக்கூடத்திற்குள் நடத்தாமல், எம்ஜிஆர் சிலை இருக்கும் வளாகத்தில் மேடை அமைத்து கொண்டாட முடியுமா? என்று ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

அறிக்கை

அறிக்கை

அதேபோல ஓபிஎஸ்ஸும், சென்னை தி.நகரில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியேற்றி கொண்டாட முடிவு செய்துள்ளார். பொன் விழா ஆண்டு நிறைவினையொட்டி, 17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளேன். என்று கூறி தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு அழைப்பும் விடுத்துள்ளார்.. இப்படி ஒரே நாளில் ஒரே கட்சியில் 3 பேரும் தனித்தனியாக விழா நடத்த முயன்றுகொண்டிருக்கிறார்கள்..

 3 பக்கம்

3 பக்கம்

இந்தசூழலில்தான், அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் 1 லட்சத்து 16 ஆயிரம் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த கடிதத்தை எடப்பாடியே, தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டுள்ளாராம்.. மொத்தம் 3 பக்கம் அளவிலான அந்த கடிதத்தை தொண்டர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ரகசியமாக நடந்து வருகிறது.

 சீக்ரெட் லட்டர்

சீக்ரெட் லட்டர்

கடிதத்தை ரகசியமாக எடப்பாடி பழனிசாமி அனுப்பிவைத்துள்ளதால், அநேகமாக ஓபிஎஸ் குறித்து முக்கிய தகவல் அல்லது குற்றச்சாட்டுகளை அதில் தெரிவித்திருக்கலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, ஓபிஎஸ் கட்சிக்கு செய்த துரோகங்களை எடப்பாடிபழனிசாமி அதில் சுட்டிக்காட்டி உள்ளாராம்.. அத்துடன், ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை பாதுக்காக்க, இதுவரை தான் பட்ட கஷ்டங்களையும் அதில் பிழிந்தெடுத்துள்ளாராம் எடப்பாடி..

116000

116000

பொன்விழாவை கொண்டாட ஓபிஎஸ் அறிக்கை மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தால், எடப்பாடி பழனிசாமி, 1 லட்சத்து 16 ஆயிரம் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அநேகமாக அன்றைய தினம், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும், ஒன்றாக இணைய சொல்லி வற்புறுத்தி வரும் பாஜகவுக்கு எதிராகவும், வழக்கம்போல திமுகவுக்கு எதிராகவும் எடப்பாடி ஏதாவது மெசேஜ் தருவார் என்கிறார்கள். பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+