Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு இருக்கா? பேங்க்கில் ரூ.1 கோடி தங்க நகைக்கடன் பெறலாம்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசர தேவைகளுக்கு நம்முடைய நகைகளை அடமானம் வைக்க வேண்டிய சூழல் வந்துவிடுகிறது.. இதுபோன்ற நெருக்கடி நேரங்களில், நகைகளை வைத்து வங்கியில் கடன் வாங்க நேரிடலாம். நகைக்கடன் வாங்கும்பட்சத்தில், என்னென்ன விதிமுறைகள் உள்ளன தெரியுமா?

நம்முடைய வாழ்வில், சொந்த வீடு கட்டுவது அல்லது சொந்த வீடு வாங்குவது என்பது பெரும்பாலானோரின் கனவாகவே இ இருக்கிறது. அந்தவகையில், வீடு வாங்கவும், வீடு கட்டவும், நிறைய வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வீட்டு கடன்களை வழங்குகின்றன..

gold loan bank loan

இதற்கு பல்வேறுவிதமான வட்டி சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இதில், அரசு வங்கிகளில் மட்டுமே தங்கக் கடன் வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், இங்கு வட்டி விகிதம் குறைவாகும்.. அதாவது, தனிநபர் கடன், சொத்துக் கடன், கார்ப்பரேட் கடன் போன்ற அடமானம் அல்லது கடன்களுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் வட்டி குறைவானது.

மாத வருமானம்: ஒருவரது மாத வருமானம், வாங்க போகும் கடன் தொகையின் அளவு, வாங்கிய கடனை அவர் திருப்பி செலுத்துவதற்கான திறன், போன்றவைகளை வைத்துதான், ஒருவருக்கு வீட்டு கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்களும் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். அதேபோல, குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால், உங்களது அடமான தங்கத்தை விற்க, கடன் வழங்கும் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

உங்களது, நகையின் தரத்தினை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகுதான், அந்த நகை மீதான கடனை நீங்கள் பெற முடியும். ஆனால், தங்க கட்டிகள், தங்க காசுகளையும் அடமானமாக வைக்கமுடியாது.

தங்கக் கடன் பெற வேண்டுமானால், 18 வயது முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும். அடமானமாக வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை 18 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

சேமிப்புகள்: வீட்டு கடன் வாங்க நேரிடும்போது, இதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக, உங்களது சொத்துகள், சேமிப்பு, வயது, கல்வித்தகுதி, உங்களை சார்ந்திருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்...

முகவரி சான்று, அடையாள சான்றுகள் மிக முக்கியம். முகவரி சான்றாக, கரண்ட் பில் ரசீது, ரேஷன் அட்டை அல்லது போன் பில் ரசீது போன்றவைகளும் அவசியம்.. பான் கார்டு இல்லாதவர்கள் படிவம் 60-ஐ சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும். அதேபோல, பத்திரம், தாய் பத்திரம், உங்களது மாத வருமானத்திற்கான சான்றிதழ், கடனுக்கு பொறுப்பான ஆவணம், கட்டிட அனுமதி, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் முக்கியம்.

நகைக்கடன்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 7.5 சதவீதத்தில் தொடங்கி வட்டி விகிதம் வேறு வேறாக உள்ளன.. மேலும், அதிகபட்சம் ரூ.1 கோடி வரையில் நகைக்கடன் பெறலாம்.. இந்த கடனை திருப்பி செலுத்த 20 வருட காலம் தரப்படும்.. மேலும், செயல்பாட்டு கட்டணம் கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் துவங்குகிறது.. இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூல் செய்யப்படும்.

அதேபோல, கடன் வாங்குவதற்கு முன்பு, உங்களது தங்கம் 18 காரட்டுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.. காரணம், பல வங்கிகள் 18 காரட்டுக்கும் குறைவான தங்கக் கடனை வழங்குவதில்லை..

கவனம் தேவை: எப்போதுமே, வங்கிக்கடன் வாங்கும்போது செயல்பாட்டு கட்டணம், மதிப்பீடு கட்டணம் எவ்வளவு என்பதை கவனிக்கவேண்டும்... ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதால், சில நிதி நிறுவனங்கள் கூடுதலாக நகைக்கடன்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். எனவே, சற்று கவனமும் எச்சரிக்கையும் தேவை.

உதாரணத்துக்கு, HDFC வங்கியில் தங்கக் கடன் வாங்கினால், 8.50 சதவீதம் முதல் 17.30 சதவீதம் வரை வட்டி கட்ட வேண்டியிருக்கும். பெறப்பட்ட மொத்த கடனில் 1 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

நீங்கள் எஸ்பிஐயில் நகைக்கடன் வாங்கினால், ஆரம்ப வட்டி விகிதமாக 8.70 சதவீதம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடன் வாங்கலாம். இந்தியன் வங்கியில் 8.65 சதவீதம் முதல் 10.40 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வங்கிகளில் வட்டிவிகிதம் காலகட்டத்துக்கு ஏற்ப மாறுபடக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+