10ம் வகுப்பு ரிசல்ட் பார்க்க போன நேரத்தில்.. மதுரவாயலில் கேட்ட அலறல்.. துடித்த மாணவர்..என்ன நடந்தது?
சென்னை; 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளனர்.

சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது. ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் பலி அடைந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும் போது விபத்தில் பலியாகி உள்ளார். லாரி கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
லாரியை ஒட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் ஓடி விட்டார். லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். பைக்கில் சென்ற மாணவன் சரியான பக்கத்தில் சென்றாலும் லாரி வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
1.தமிழ் - 8 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றனர்.
2.ஆங்கிலம் - 415 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றனர்.
3. கணிதம் - 20,691 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றனர்.
4. அறிவியல் - 5,104 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றனர்.
5.சமூக அறிவியல் - 4,428 பேர் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றனர்.
10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications