சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படி போடு.. "மொத்தமாக மாத்திடுங்க".. ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு.. மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024 ஜனவரியில் 150 நாடுகளுக்கும் அதிகமாக பங்கேற்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு சென்னையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

அந்த வகையில் சென்னையில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் தற்போது வெள்ளம், நீர் தேக்க பிரச்சனைகளை கட்டுப்படுத்த வெள்ள நீர் கால்வாய் அமைப்பு உள்ளது.

சென்னையில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் தேங்காமல் இருக்க இந்த வெள்ளநீர் கால்வாய் திட்டம் பெரிய அளவில் உதவியாக இருந்தது. 90 சதவிகிதம் இதன் பணிகள் முடிந்துள்ள போதும் கூட இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் பலன் அளித்தது.

மேயர் பிரியா + சிஎம்டிஏ.. சேகர் பாபுவிற்கு கிடைத்த மெகா வெற்றி.. பவரை அள்ளிக்கொடுத்த ஸ்டாலின்.. ஏன்?மேயர் பிரியா + சிஎம்டிஏ.. சேகர் பாபுவிற்கு கிடைத்த மெகா வெற்றி.. பவரை அள்ளிக்கொடுத்த ஸ்டாலின்.. ஏன்?

மழை

மழை

சென்னையில் பல இடங்களில் கடந்த முறை மழை பெய்த உடனே வெள்ளம் வடிந்தது. இந்த நிலையில்தான் தற்போது வெள்ள வடிகால் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடியாத இடங்களில் தற்போது பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதோடு இந்த வெள்ள நீர்களை ஏரிகளுக்கு அனுப்பும் முடிவிலும் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. இந்த வெள்ளம் வெறுமனே கடலில் கலப்பது தடுக்கப்பட்டு அதை ஏரிகளுக்கு அனுப்பும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் முன் இந்த பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நீர் நிலைகள்

10 நீர் நிலைகள்

அதன்படி சென்னையில் இருக்கும் 10 நீர் நிலைகள் புனரமைக்கப்பட உள்ளன. அதோடு இந்த நீர் நிலைகளின் தோற்றமும் மொத்தமாக மாற்றப்பட உள்ளது. வெறுமனே நீர் நிலைகளாக இவை இல்லாமல், இதை சுற்றுலா தலங்கள் போல மாற்ற உள்ளனர். முன் பக்கம் பூங்காக்கள் அமைப்பது, மக்கள் நடக்க நடைப்பயிற்சி இடங்கள் அமைக்கப்பட்டது, நீர் நிலைகளில் படகு சுற்றுலா மேற்கொள்வது போன்ற மாற்றங்களை செய்ய உள்ளன. சென்னையில் இருக்கும் பிரபலமான ஏரிகளில் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். இதற்காக ஓபன் டெண்டர் விடுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிஎம்டிஏ

சிஎம்டிஏ

சமீபத்தில் இந்த திட்டம் தொடர்பாக சிஎம்டிஏ அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். மொத்தம் 100 கோடி ரூபாயில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல் மற்றும் கொளத்தூர் ஆகிய ஏரிகளில் இந்த மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட உள்ளது. சென்னையின் வானிலையை சரி செய்ய, காலநிலை மாற்றத்தை தடுக்க, மழை வெள்ள காலத்தில் எளிதாக சமாளிக்க தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.

நடவடிக்கை

நடவடிக்கை

மொத்தமாக நீர் நிலைகளின் தோற்றத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களை மண்டலம் வாரியாக அமைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மண்டலம் வாரியாக நீரை சுத்திகரித்து அதன்பின் ஏரிகளில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையின் நீர் நிலைகள் பெரிய அளவு உருமாற்றம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Major News: Top 10 waterbodies in Chennai to get a face lift in coming days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X