"சிக்ஸர்" அடித்த ஓபிஎஸ்.. நறுக்கென "ஒரே" கேள்வி.. அப்படியே சாய்ந்த தீர்ப்பு.. வக்கீல்கள் பரபர பேட்டி
ஓபிஎஸ் தரப்பின் முக்கிய வாதம் என்ன என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், கோர்ட்டில் எடுத்து வைத்த அந்த முக்கிய வாதம் என்ன என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.. இன்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.
Recommended Video
அதேபோல, ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை எடப்பாடி தனியாக கூட்ட முடியாது.. அப்படியே கூட்டினாலும், அதற்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை.. இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடியின் நியமனங்கள் எதுவும் செல்லாது என்பதே இன்றைய தீர்ப்பாக உள்ளது.

தலைதூக்கியது
நீதிமன்றம் சொல்லி உள்ள இந்த தீர்ப்பின்படிதான், இத்தனை காலமும் இரு தலைவர்களும் செயல்பட்டு வந்தனர்.. ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய பிறகுதான், எல்லாமே நடுவில் மாறியது.. இனி, இருவரும் இணைந்துதான் எந்த ஒரு முடிவிலும் கையெழுத்து போட வேண்டும், இதில் தகராறு செய்ய முடியாது.. இதில் ஒருவர் கையெழுத்து போட்டு, இன்னொருவர் கையெழுத்து போடாமல் விட்டால், அது கட்சிக்கு சிக்கலாகிவிடும். இதன்மூலம் ஓபிஎஸ், இழந்த தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

4 கேள்விகள்
அதேபோல, நீதிமன்றத்தில் கடந்த வாரம் அதிமுக பொதுக்குழுவில் 4 கேள்விகள் எடப்பாடி தரப்புக்கு நீதிபதி முன்வைத்தார்.. இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளின் தற்போதைய நிலை என்ன? காலாவதியாகிவிட்டது எனில், எவ்வாறு காலாவதியானது? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது? பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? என்ற கேள்விகள்தான் எடப்பாடி தரப்பை சுருட்டி போட்டதாக சொல்கிறார்கள்.

டோட்டல் சேன்ஞ்
இதனிடையே இன்று தீர்ப்பு வெளியான நிலையில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.. அப்போது, தாங்கள் முன்வைத்த அந்த முக்கியமான வாதம்தான், வழக்கின் தீர்ப்புக்கு காரணம் என்றும் விளக்கினார்கள்.. அவர்கள் சொன்னதாவது: "வழக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால், 23.6.2022 அன்று இரண்டு பதவிகளும் காலாவதியாகவில்லை.... இன்றைய தினம் வரை 2 பதவிகளும் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருந்து கொண்டுள்ளது.. மேலும், எந்தவிதமான திருத்தங்களும், ஒப்புதலுக்கு வைக்கப்படவுமில்லை, அவை நிராகரிக்கப்படவும் இல்லை.. இதுதான் எங்களுடைய முக்கிய வாதம்..

2 + பாயிண்ட்
இது அப்படியே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.. எனவே தற்போது கட்சியை வழிநடத்தும் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில்தான் அமைய வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.. தற்போது அதிமுக, 23-6-22-க்கு முன்பிருந்த நிலைமையே தொடர்கிறது, அதில் எந்தவித மாற்றமும் இல்லை.. எந்தவிதமான சட்டசிக்கலும் இல்லை.. நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் தற்போதுவரை இந்த விஷயத்தைதான் வலியுறுத்தி வருகிறது.. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.." என்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications