"ராஜதந்திரம்".. தொக்கா சிக்கிய புள்ளி.. அசராத வைத்திலிங்கம்.. அதே போஸ்டிங்.. நிமிர்கிறதா டெல்டா?
வைத்திலிங்கத்துக்கு ஓபிஎஸ் புது போஸ்டிங் தந்துள்ளதற்கு என்ன காரணம்
சென்னை: வைத்திலிங்கத்துக்கு புது போஸ்டிங் தந்து அழகு பார்த்துள்ளார் ஓபிஎஸ்.. இதற்கு என்ன காரணம்? வைத்திலிங்கத்தின் நியமனம், எடப்பாடி தரப்புக்கு எந்த அளவுக்கு சறுக்கலை தரும்?
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எப்படி நீக்கி கொண்டு வருகிறாரோ, அதுபோலவே, ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நீக்கி கொண்டு வருகிறார்.
மேலும், அவரவர் ஆதரவாளர்களுக்கு புது புது போஸ்டிங்குகள் தரப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போது, கடைசியாக, எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவியையே, பறித்து ஓபிஎஸ் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

வைத்திலிங்கம்
அதன்படி, எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, வைத்திலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது... எடப்பாடி பழனிசாமி பதவியை எப்படியும் ஓபிஎஸ் பறிப்பார் என்பது எந்த அளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றோ, அதே அளவுக்கு அவருக்கு பதிலாக, வைத்திலிங்கத்துக்குதான் அந்த பதவி தரப்படும் என்பதும் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்... ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதால் மட்டுமே இந்த பதவி வைத்திலிங்கத்துக்கு தரப்படவில்லை.. இதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

எடப்பாடி பழனிசாமி
ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர் வைத்திலிங்கம்.. சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்திலிங்கம்.. எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்..

இரட்டை விவகாரம்
ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அன்று அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்னாக போகிறதோ என்று டெல்டா அதிமுக கவலைப்பட்டது.. ஆனாலும், ஓபிஎஸ் இவரை அப்போது கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. அப்போது முதல் ஓபிஎஸ் ஆதரவாளராகவே தன்னை காட்டிக்கொண்டு வந்தார் வைத்திலிங்கம்.

கறுப்பு ஆடு - அப்செட்
ஆனால், எடப்பாடியிடம் அளவுக்கு அதிகமாக அதிருப்திகளும் இவருக்கு எழுந்து கொண்டே இருந்தன.. எப்படியும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தனக்கு எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்.. அதேபோல, தென்மண்டங்களைவிட, கொங்கு மண்டலத்தையே எடப்பாடி அரசு தூக்கி வளர்த்ததும், வைத்திலிங்கத்தின் அதிருப்திக்கு இன்னொரு காரணமானது... அதனால் கொங்குவிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட முயற்சி செய்தார்..

சீனியர் யார்
ஆனால், அதற்குள் வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கட்டிட அனுமதி வழங்குவதற்காக ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் எதிர்ப்பு பதிவானது.. இதற்கு கொங்குவில் உள்ள அந்த சீனியரின் உள்ளடி வேலைதான் காரணம் என்ற ஆத்திரம் மேலும் வைத்திலிங்கத்துக்கு அதிகமானதாம். அந்த கருப்பு ஆடு யார் என்பதை அறிந்து மேலும் கொந்தளித்துவிட்டாராம்.. இதற்கு பிறகுதான், கடந்த ஒரு மாத காலமாக அதிமுகவில் பூசல்கள் நடந்தபோதும், ஓபிஎஸ் பக்கமே உறுதியாகவும், பக்கபலமாகவும் நின்றார்.

காய் நகர்த்தல்
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் உறுதியாக இருப்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி தரப்பும், தன் வேலையை காட்டியது.. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை காமராஜரை வைத்து காய் நகர்த்த துவங்கியது.. அந்தவகையில், வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மாஜி எம்எல்ஏக்கள் திருவையாறு ரத்தினசாமி, கும்பகோணம் ராம.ராமநாதன், பட்டுக்கோட்டை சி.வி.சேகர், பேராவூரணி கோவிந்தராஜன், தஞ்சாவூர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் எடப்பாடி பக்கம் தாவினர்.. ஆனாலும், வைத்திலிங்கம் அசரவில்லை.

ஒரத்தநாடு மேட்டர்
எடப்பாடிக்கு எதிரான அரசியலை செய்து, தஞ்சை டெல்டாவை தன்வசம் மட்டுமே வைத்திருக்க வைத்திலிங்கம் முடிவு செய்துள்ளாராம்.. இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அவர்தான் முதல்வர் பதவியில் உட்கார்ந்திருப்பாராம்.. இந்த வருத்தமும் டெல்டாவுக்கு இப்போதும் உண்டு.. அந்தவகையில்தான், இந்த போஸ்டிங் தரப்பட்டுள்ளதாம்.. இதைவைத்து, டெல்டா மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தை வைத்தே அதிமுகவை நிமிர்த்திவிடலாம் என்பதே ஓபிஎஸ் தரப்பின் கணக்காகவும் உள்ளதாம்.

போஸ்டிங்
இது எல்லாவற்றிற்கும் மேலாக கட்சிக்குள்ளேயே ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. எஸ்பி வேலுமணியிடம் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக இருப்பதுடன், அவர் பேச்சை கேட்டு கொண்டு செயல்படுவதால்தான், ஓபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் உறுதியாக நின்றார் என்றும், இந்த விசுவாசம் காரணமாகவே ஓபிஎஸ், எடப்பாடி போஸ்டிங்கை வைத்திலிங்கத்துக்கு தந்ததாகவும் சொல்கிறார்கள்.. ஆக, எப்படி பார்த்தாலும், எடப்பாடி Vs வைத்திலிங்கம் என்றுகூட களம் உருவாகலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சின்னம் முடங்குமா?
இதனிடையே, வைத்திலிங்கத்துக்கு பதவி தந்ததையடுத்து, தென்மண்டலங்களில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஒருசில அரசியல் நோக்கர்களிடம் கேட்டோம்.. அவர்கள் சொன்னதாவது: கவுண்டர்கள் & முக்குலத்தோர் என கட்சி பிரிந்துள்ளது.. இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சி இருந்தாலும், சின்னம் முடங்கினால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான நிலை ஏற்படும்... அப்போது, பொது வாக்குகள் ஏராளமான அவர் பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளது.

கவுண்டர் சமுதாயம்
சமீபகாலமாக, நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு பார்த்தோமானால், தொண்டர்கள் மத்தியிலும் தென்மண்டலங்களில் எடப்பாடி மீது அதிருப்தி கூடிவிட்டது.. ஏற்கனவே, சசிகலாவை மட்டும் ஓரங்கட்டியது மட்டுமல்லாமல், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. கவுண்டர் சமுதாயத்தினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கடுப்பை தந்து வருவதால், எந்நேரமும் சசிகலாவின் ஆதரவை நாடலாம்..

இமேஜ்
ஆனால், எடப்பாடி தரப்பு இதற்கு பதில் நடவடிக்கையில் எப்போதோ இறங்கிவிட்டதாக தெரிகிறது. தென்மண்டலங்களில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர் என்றும், ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் அதாவது 95 சதவீத தொண்டர்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளதாகவும், இப்போதே பேட்டிகளை தர ஆரம்பித்துவிட்டனர்.. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ், அவரது மகன், இருவருமே திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளதையும் பகிரங்கப்படுத்த போகிறார்களாம்.. இதனால், ஓபிஎஸ் தரப்பு மீதான இமேஜ் குறையும் என்பதே எடப்பாடி தரப்பின் பிளானாம்.. இரு பக்கத்திலுமே தீவிரமான காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகி உள்ளதால், தென்மண்டலத்தில் யார் கை ஓங்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications