Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி ஷாப்பிங்: வீதி பூராம் மனித தலைகள்.. புத்தாடை வாங்க படையெடுத்த மக்கள்.. திணறும் நகரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகள், பொருட்களை வாங்கிச் செல்வதால், முக்கிய வீதிகளில் கடுமையான நெரிசல் நிலவி வருகிறது.

தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடுவதற்கு உற்சாகமாக தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு புத்தாடை வாங்க மொத்த விற்பனையகங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள் உள்ளிட்டவற்றில் தற்போது தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. துணிக் கடைகள், இனிப்புக் கடைகள், பட்டாசு கடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன பொருள், நகைக் கடைகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Major streets of Chennai, Madurai, Coimbatore, Trichy are thronging with people due to diwali shopping

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் கடை வீதிகள் எங்கும் சாலையே தென்படாத அளவுக்கு மனித தலைகளாகவே காணப்படுகிறது. தொடர்ந்து, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ரோடு, பிராட்வே குடோன் தெரு உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். குறிப்பாக, தி.நகரில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள் எனச் சொலும் வகையில், குடும்பம் குடும்பமாக தீபாவளி ஷாப்பிங்கில் தீவிரம் காட்டி வருகின்றனர் பொதுமக்கள். எள்ளு போட்டால் எள்ளு எடுக்க முடியாது எனக் கூறும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

Major streets of Chennai, Madurai, Coimbatore, Trichy are thronging with people due to diwali shopping

மதுரையில் உள்ள மேலமாசி வீதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அங்கு ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது தவிர சாலையோரங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கோவையில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். இன்று வார விடுமுறை என்பதாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் ஜோராக தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Major streets of Chennai, Madurai, Coimbatore, Trichy are thronging with people due to diwali shopping

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சத்திரம் பேருந்து நிலைய பகுதி, என்எஸ்பி சாலை, பெரியகடைவீதி சந்திப்பு, மலைக்கோட்டை, காந்தி மார்க்கெட், மெயின்கார்டு கேட் நந்திகோவில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாடைகள், பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

சேலத்திலும் தீபாவளி பண்டிகை ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு, ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுவதால் சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Major streets of Chennai, Madurai, Coimbatore, Trichy are thronging with people due to diwali shopping

திருப்பூரில், புதுமார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் வீதி, குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பர்ச்சேஸுக்காக மக்கள் குவிந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிப்புகள் ஒலிக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் தீபாவளி விற்பனை காரணமாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இனி வரும் நாட்களில், இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி திருட்டுகள், வழிப்பறிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளதால் போலீசார், கூட்டமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+