சென்னை மக்களே கவனம்! மெட்ரோ பணிகள்! அடுத்த 10 நாட்களுக்கு இந்த முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணிகள் காரணமாகச் சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்த அறிவிப்பைச் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்
இந்தியாவிலேயே அதிகம் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு தலைநகர் சென்னை உள்ளது. நபீக் ஹவர்களில் வெளியே செல்லும் போது நிச்சயம் குறிப்பிட்ட நேரம் டிராபிக்கில் சிக்கிக் கொள்வோம்.
குறுகலான சாலைகள், அதிகரிக்கும் வாகனங்கள் என்று பல்வேறு காரணங்களால் தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தலைநகர் சென்னை
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவே மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது சென்னையில் மெட்ரோ இரண்டு வழித்தடங்களில் உள்ளது. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை மற்றும் சென்டரல் முதல் பரங்கிமலை வரை என்று இரு வழித்தடங்களில் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

மெட்ரோ
மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் என்று மூன்று வழித்தடங்களில் மெட்ரோ வரவுள்ளது.. வரும் 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதற்கான பணிகள் நகர் முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை போலீஸ்
இதனிடையே மெட்ரே கட்டுமான பணிகள் காரணமாக நகரில் பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி இப்போது ஆற்காடு சாலையில் சோதனை அடிப்படையில் இன்று முதல் 10 நாட்களுக்குப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், "கோடம்பாக்கம் (R-2) போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெறுவதால், ஆற்காடு சாலையில் தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆற்காடு சாலை
நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள்... ஆற்காடு சாலையிலிருந்து, வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்வதற்குத் தடை செய்யப்படுகிறது. சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமி சாலை, சன்னதி சாலை மற்றும் 2 வது அவின்யூ வழியாக அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

போக்குவரத்து மாற்றம்
துரைசாமி சாலையிலிருந்து, சன்னதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. சன்னதி தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். சைதாப்பேட்டை சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களால் தடை செய்யப்படுகிறது .

போலீசார் அறிவிப்பு
100 அடி சர்வீஸ் சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதலில் 10 நாட்களுக்குச் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், இது வெற்றிகரமாக இருந்தால் இப்பகுதியில் கட்டுமான பணிகள் முடியும் வரை போக்குவரத்து தொடர்ந்து அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications