சாதனை.. 22 நாட்களில் 5 நாடுகளில் 22 கிளைகளை திறக்கும் Malabar Gold & Diamonds- பலருக்கு வேலைவாய்ப்பு
சென்னை: மலபார் கோல்டு மற்றும் டயமண்ட் நிறுவனம் இந்த மாதம் புதிதாக 22 ஷோ ரூம்களை திறக்க உள்ளது. 22 நாட்களில் 22 கிளைகளை திறந்து அந்த நிறுவனம் சாதனை படைக்க உள்ளது.
Malabar Gold and Diamonds நிறுவனம் உலகம் முழுக்க 250 கிளைகளுடன் இயங்கி வருகிறது. 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுக்க இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா என்று பல நாடுகளில் மலபார் கோல்டு மற்றும் டயமண்ட் பரந்து விரிந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 22 கிளைகளை இந்த மாதம் மலபார் கோல்டு மற்றும் டயமண்ட் நிறுவனம் திறக்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தங்க விற்பனை நிறுவனமான மலபார் இந்த மாதம் மட்டும் 8 மாநிலங்களில் 10 கிளைகளையும் 4 வெளிநாடுகளில் 12 கிளைகளையும் திறக்க உள்ளது.
இதற்காக 800 கோடி ரூபாயை அந்த நிறுவனம் முதலீடு செய்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் 5 ஆயிரம் பேருக்கு இந்த வருடம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த உள்ளது.
இந்த நிலையில் மலபார் கோல்டு நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் சேர்மேன் எம்.பி அஹமது, கடந்த 29 வருடமாக நாங்கள் இந்த துறையில் இருக்கிறோம். மலபார் கோல்டு நிறுவனத்திற்கு இத்தனை வருடமாக மக்கள் சிறப்பான ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர்களின் ஆதரவோடு நாங்கள் பணி செய்து இருக்கிறோம். ஒரே இந்தியா ஒரே தங்க விலை என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு வருடமும் டார்கெட் வைத்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். முறையான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகிறோம். இந்த மாதம் மட்டும் 22 புதிய ஷோ ரூம்களை திறக்க உள்ளோம். வரும் 8ம் தேதி பெங்களூரில் எம்ஜி ரோடில் புதிய கிளை ஒன்றை திறக்க உள்ளோம். சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் புதிய கிளையை தொடங்கினோம். 2200 சதுர அடியில் இந்த கிளை அமைய உள்ளது.
சமுதாயம், மக்கள், முதலீட்டாளர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். முதலில் அமெரிக்காவில் தொடங்கிய போதும் மற்ற வெளிநாடுகளில் தொடங்கிய போதும் அங்கு எங்களுக்கு ஆதரவு இருக்குமா என்ற அச்சத்தோடுதான் சென்றோம். ஆனால் அங்கு எங்களுக்கு பெரிய ஆதரவு இருந்தது.
எங்களின் வெளிப்படைத்தன்மைதான் மக்கள் தொடர்ந்து மலபார் கோல்டு நிறுவனத்திற்கு ஆதரவு தர காரணம். முக்கியமாக மூன்றாவது பார்ட்டி சான்றிதழ் அளிக்கும் அளவிற்கு நாங்கள் தரமான ஆபரணங்களை விற்பனை செய்து வருகிறோம். இந்தியாவில் தயாரிப்போம் வெளிநாட்டில் விற்பனை செய்வோம் என்பதே எங்களின் நோக்கம்.
இந்திய பிராண்டை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று, அதை பெரிதாக்குவதே எங்களின் நோக்கம். அரபியில் மலபார் என்ற பெயரை பிரபலம் ஆக்கி உள்ளோம். அரபு நாடுகளில் மலபார் என்றால் சிறப்பான பிராண்ட் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் இப்படித்தான். அவர்களுக்கு ஏற்ற நகைகளை விற்பனை செய்வதன் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது.
எப்போதும் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். தரம்தான் எங்களின் நோக்கம். வித விதமான புதிய டிசைன்களில் உற்பத்தி + தரம் என்பதே எங்களின் தாரக மந்திரம். எங்களின் நிறுவன வருவாயில் 5 சதவிகிதத்தை தொண்டு பணிகளுக்காக செலவு செய்து வருகிறோம்.
எங்கள் வருமானத்தில் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும், தெலுங்கனாவிலும் பலருக்கும் கல்விக்கு செலவு செய்து இருக்கிறோம். கேரளாவில் வீட்டிற்கும், மருத்துவத்திற்கும் செலவு செய்து இருக்கிறோம். சாலை ஓரங்களில் வசிக்கும் பெண்களுக்கும் நாங்கள் தொண்டு பணிகளை வழங்கி வருகிறோம். அவர்களுக்கு இருப்பிடம், உணவு போன்றவற்றை வழங்கி வருகிறோம்
எங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை அதை மக்களுக்கும் தொண்டு பணிகள் செய்வதை நாங்கள் புண்ணியமாக கருதுகிறோம். இதற்காக பல மாநில அரசுகளுடன் இணைந்து நாங்கள் பணிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு கடவுளின் அனுகிரகம் கிடைத்தால் போதும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தில் எல்லோரும் ஒரே மாதிரிதான். நாங்கள் எங்களை குடும்பம் என்றுதான் அழைப்போம் 2025ல் உலகில் நம்பர் 1 நகை விற்பனை நிறுவனமான உருவெடுக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறோம். பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறோம். ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களையும் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், என்று குறிப்பிட்டார்.
மலபார் நிறுவனத்தின் துணை சேர்மேன் இப்ராஹிம் பேசுகையில், 22 நாட்களில் 22 கிளைகள் தொடங்குவது என்பது பெரிய சாதனை. கடந்த 29 வருடங்கள் நாங்கள் பல சாதனைகளை புரிந்து இருக்கிறோம். இது மிகப்பெரிய பயணம். எங்களின் வெற்றி பல நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. எங்களின் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபம் ஈட்டி இருக்கிறோம். இது மிகப்பெரிய பாரம்பரியமாக பணி. உலகின் ஜிடிபியில் தங்க வர்த்தகம் பெரும் பங்கு வகிக்கிறது.
இது பெரிய அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிறது. முக்கியமாக இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க தங்கம் மற்றும் வைர துறை பெரிதும் உதவுகிறது. இந்த பாரம்பரியமான பணியை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்று குறிப்பிட்டார்.
எங்கெல்லாம் திறக்கப்படுகிறது?
8ம் தேதி பெங்களூரில் புதிய கிளை, பின்னர் மகாராஷ்டிரா, மலேசியா, தெலுங்கானா, 14ம் தேதி திருப்பூரில் புதிய கிளை, பெங்களூர், வாரணாசி, மஸ்கட் உள்ளிட்ட இடங்கள் உட்பட 22 இடங்களில் கிளைகள் திறக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications