உங்க மகனை கோடீஸ்வரன் ஆக்கும் தபால் துறை திட்டம்.. இன்று சேமித்தால் எதிர்காலத்தில் பல லட்சம் உறுதி
சென்னை: தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரித்தி என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம் இருப்பது போலவே, ஆண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் பொன் மகன் பொது வைப்பு நிதித் திட்டம் (Ponmagan Podhu Vaippu Nidhi).. சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக சிறுகச் சிறுகச் சேமிக்க இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். இந்த அருமையான திட்டம் பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பொன் மகன் சேமிப்பு திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் சேருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.. ஒரு தந்தை அல்லது தாய் தனது ஆண் குழந்தையின் பெயரில் தபால் நிலையத்தில் மிக எளிமையாக இந்தக் கணக்கைத் தொடங்கிவிடலாம்..

பொன் மகன் சேமிப்பு
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ய முடியும்.. ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சிறுகச் சிறுக பணத்தைச் செலுத்தும் வசதி இதில் இருப்பதால், தினக்கூலி வேலை செய்பவர்கள் கூடத் தங்கள் வசதிக்கு ஏற்ப சேமிக்க முடியும்..
இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது மத்திய அரசால் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.. தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது..
இதில் வட்டி கணக்கிடப்படும் முறை மிகவும் லாபகரமானது.. நீங்கள் செலுத்தும் அசலுக்குக் கூட்டு வட்டி (Compound Interest) முறையில் வட்டி கணக்கிடப்படுகிறது.. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் அசலுக்குக் கிடைக்கும் வட்டியானது, அடுத்த ஆண்டுக்கான அசலோடு சேர்க்கப்பட்டு, அந்த மொத்தத் தொகைக்கும் சேர்த்து மீண்டும் வட்டி கணக்கிடப்படும்..
போஸ்ட் ஆபீஸ் திட்டம்
இதனால் நீங்கள் சேமிக்கும் சிறு தொகை 15 ஆண்டுகள் கழித்து முதிர்வு அடையும்போது ஒரு பெரிய தொகையாக உங்கள் கைக்கு வந்து சேரும்.. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் என நீட்டித்துக் கொள்ளும் வசதியும் தபால் நிலையங்களில் வழங்கப்படுகிறது..
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம் என்பதால், உங்கள் பணத்திற்கு 100 சதவீதம் உத்தரவாதம் உண்டு.. பங்குச் சந்தை மாற்றங்களால் இந்தத் திட்டம் பாதிக்கப்படாது என்பது பாமர மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாகும்..
வரிச்சட்டம் - முதலீடு
அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கும், முதிர்வு காலத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் மொத்தத் தொகைக்கும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படுகிறது..
அவசரத் தேவைகளுக்காகக் கணக்குத் தொடங்கி 3 ஆண்டுகள் முடிந்த பிறகு கடன் பெறும் வசதியும், 7 ஆண்டுகள் முடிந்த பிறகு பாதியளவு தொகையை எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.. உங்கள் வீட்டு ஆண் பிள்ளையின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு ஒரு பெரிய தொகையைச் சேர்க்க நினைத்தால், பொன் மகன் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்..












Click it and Unblock the Notifications