இந்த 2 நிபந்தனைகளுக்கு ஒத்துவந்தால் தான் கூட்டணி.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு! ஆஹா.. ட்விஸ்ட்!
சென்னை: 2 நிபந்தனைகளுக்கு ஒத்து வரும் கட்சியுடன் தான் கூட்டணி, இல்லையேல் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என மநீம துணை தலைவர் மவுரியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்கள் நலனிலும் மக்கள் நீதி மய்யம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது. கமல்ஹாசனின் கொள்கைகளுடனும் சிந்தனைகளுடன் ஒத்த கருத்து கொண்டவர்களுடன் தான் கூட்டணி அமைய முடியும்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இந்த 2 நிபந்தனைகளுடன் யாரும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்கமாட்டோம். கூட்டணி தொடர்பாக ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் பல்வேறு மேடைகளை கமல்ஹாசன் பகிர்ந்து வருவதால் திமுக கூட்டணியில் கமல் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் இன்று 2 நிபந்தனைகளுடன் ஒத்து வருபவர்களுடன் தான் கூட்டணி, இல்லையேல் தனித்துப் போட்டியிடுவோம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications